இது வாய்தானே…. பின்னாடி எப்படி பேசுமோ? யதார்த்த விஜய் சேதுபதி!
இந்த மாத ஆயுதபூஜை விடுமுறை ஸ்பெஷல்களில் ஒன்று ‘கருப்பன்’! ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்தின் பிரஸ்மீட் சென்னையிலிருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது.
மேடையில் வசவச கூட்டமில்லை. வளவள பேச்சு இல்லை. எண்ணி மேடையில் ஏறிய நால்வரில் விஜய் சேதுபதி மட்டும் சற்று நேரம் எடுத்துக் கொண்டார். அவரிடம் வீசப்பட்ட கேள்விகள் ஒன்று-
“இப்ப தமிழ் சினிமா வேறொரு ஜானருக்கு போகப் போவுது. ‘அடல்ட் காமெடி’ என்ற பின்னணியில் ஒரு படம் வரப்போகிறது. அந்தப்படம் வெற்றி பெற்றால், விஜய் சேதுபதி மாதிரியான பொறுப்பான நடிகர்களும் அதுபோன்ற படங்களில் நடிக்கக் கூடும். நடிப்பீங்களா?” என்பதுதான் அது.
“அப்படியெல்லாம் நான் நடிக்க மாட்டேன்னு இப்ப சொல்லிடலாம். ஆனால் இப்பவே எதற்கும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஏன்னா, வாய்தானே இது? பின்னாடி என்ன பேசுமோ?” என்றார் பளிச்சென!
அதே போல இன்னொரு கேள்வி. இந்தப்படத்தில் நீங்க ஜல்லிக்கட்டு வீரரா நடிக்கிறீங்க. காளையை கஷ்டப்பட்டு அடக்குனீங்களா, அந்த எக்ஸ்பீரியன்ஸ் சொல்லுங்க?
“அண்ணே… காளையை நான் கஷ்டப்பட்டெல்லாம் அடக்கல. கிராபிக்ஸ் உதவியோடுதான் அடக்கியிருக்கேன். பயிற்சி எடுத்தேன்னு பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன்” என்றார்.
இதே வேறு ஹீரோக்கள் என்றால் என்னென்ன பதிலெல்லாம் வந்திருக்கும்? அப்பளத்தை அடையாக்கி, அடையை படையாக்கியிருப்பார்கள்.
அங்கதான் நிக்குறாரு விஜய் சேதுபதி!
https://youtu.be/OaGt1abiIoQ