கமல்ட்ட பணம் போச்சுல்ல? திரும்ப வாங்குன மாதிரிதான்!

நடிப்பு விஷயத்தில் கமல் சக்கரவர்த்தியாக இருக்கலாம். ஆனால் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அவர் ‘சாதா’வர்த்திதான்! அவருக்கு இரண்டு கோடி அட்வான்ஸ் பணத்தை கொடுத்துவிட்டு கால்ஷீட்டும் வாங்க முடியாமல் பணத்தையும் திரும்ப பெற முடியாமல் கோர்ட் வரைக்கும் போய் குமுறிய அனுபவம், இயக்குனர் சரணுக்கு உண்டு.

‘எனக்கு சம்பளமே வரல’ என்று கவுதமியே கவலைப்பட்ட கதை உலகம் அறிந்ததுதான். இப்படி பொதுவாழ்வில் பால். நிஜவாழ்வில் அறுத்துத்தள்ளும் வாள் என்று ஷாக் கொடுக்கும் கமலின் இமேஜ், இன்று மேலும் டேமேஜ் ஆகியிருக்கிறது.

சுமார் பத்து வருடங்களுக்கு முன் பிரமிட் சாய்மீரா என்றொரு கம்பெனி தமிழில் படம் எடுக்க வந்தது. பல நூறு கோடிகளை உள்ளே இறக்கி நாடு முழுக்க தியேட்டர்களை லீசுக்கு எடுத்தார்கள். ஒரே நேரத்தில் ஏழெட்டு படங்களை தயாரித்தார்கள். அகல கால் வைத்தால் அன்ட்ராயரின் தையல் கிழியும் என்பதை நாட்டு மக்களுக்கு வந்த வேகத்தில் உணர்த்திய பல சினிமா கம்பெனிகளில் இதுவும் ஒன்றாகிப் போனது. பங்கு சந்தையில் இறங்கி பணத்தை புரட்டி, கமலிடம் கொண்டு போய் கொட்டியழுத இந்த கம்பெனி, அதற்கப்புறம் கால்ஷீட் வாங்குவதற்குள் கால் சட்டை கழண்டு ஓடியது.

போகிற ஓட்டத்தில் பணத்தை கேட்டால்? கொடுப்பாரா கமல்? “கால்ஷீட் தர்றேன். படம் எடுங்க. பணமா கேட்டால் நோ” என்று கூறிவிட்டார். அண்ணாந்து குடிக்கறதுக்கே தொண்டை அடைக்குது. இதுல திண்ணையில உட்கார்ந்து கச்சேரி பண்ணுறீயா என்று கேட்டால்?

நன்றாக கிடுக்கிப்பிடி போடுகிற நேரமாக பார்த்து காத்திருந்த பிரமிட் சாய்மீரா, விஸ்வரூபம் 2 வருகிற நேரம் பார்த்து நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. வரவேண்டிய ஐந்து கோடியை வட்டியோடு கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்பது இவர்களின் வாதம்.

கோர்ட் என்ன சொல்லப்போகுதோ?

2 Comments
  1. Sundar says

    Don’t blame Kamal Sir blindly. You know very well that it’s not his fault. If you really don’t know, just read the press release from him at the time of Unnaip Pol Oruvan’s release. Why Pyramid Sai Meera waited for 10 years to get back their money. If they want to stop his film why didn’t they do it for his previous films ? You don’t even think about that ?

    1. Vijay says

      Kamal is number one fraud.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இவங்கள வச்சு படம் எடுக்கறதுக்கு பதிலா!

https://www.youtube.com/watch?v=0oiILyfWk38

Close