ஓசியில கொடுத்தால் கூட வேணாம்! இதென்ன பாலாவுக்கு வந்த சோதனை?

நல்லா வாழ்ந்த சசிகுமாருக்கு குரு வைத்த ஸ்குருதான் தாரை தப்பட்டை. ‘பத்தரை கோடியில் முடிச்சுரலாம்டா…’ என்று உரிமையோடு காதில் ஓதி, பட்ஜெட்டை 30 கோடிக்கு மேல் ஏற்றிவிட்டிருந்தார் பாலா. அந்த நேரத்தில் மதுரை அன்புச்செழியனிடம் வாங்கிய கடன்தான் வாலும், கொடுக்குமாக முளைத்து சசிகுமாரை சந்தியில் இழுத்துவிட்டிருக்கிறது.

அவரது அத்தை மகன் அசோக் குமாரும் இந்த கடன் விவகாரத்தால்தான் தற்கொலை செய்து கொண்டார். சரி போகட்டும்… நாம் மேலே சொன்ன தலைப்புக்கு வருவோம்.

தாரை தப்பட்டைக்கு பொதுமக்கள் கொடுத்த மரியாதைதான் ஊருக்கே தெரியுமே? இந்த நிலையில் இந்த படத்தை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு விற்க முயன்றார்களாம். அந்தப்படமா? வேணாம் சார்… என்று எடுத்த எடுப்பிலேயே என்ட் கார்டு போட்டுவிட்டது சேனல். இருந்தாலும், பின்னாளில் சேனலுக்கும் நமக்குமான ரிலேஷன்ஷிப்பாவது வலுக்குமே என்று எண்ணிய சசிகுமார், ‘பணமே வேணாம்ணே. சும்மா போட்டுக்கோங்க’ என்று சேனல் சிஇஓ விடம் சொல்ல, ‘இருக்கட்டும் சார். நமக்கு விருப்பமில்ல’ என்று ஸ்ரிக்டராக கூறிவிட்டாராம் அவர்.

இப்படியாக பல் இளித்துக் கொண்டிருக்கிறது பாலாவின் மவுசு!

1 Comment
  1. Sampath says

    பாலா படத்துல ஒரு காட்டுமிராண்டி தனமா ஒரு சீன் வெச்சுருப்பான் – சட்டை இல்லாத வில்லன் கர்பிணி பொண்ணு புடவைய உருவி வயித்துல மிதிப்பான், அப்புறம் வயித்த கொடூரமா கத்தியால கிழிச்சு குழந்தைய எடுப்பான். என்ன கொடூரமான சிந்தனை. காட்டுமிராண்டி நாயீ பாலா படத்தை டிவில வேற போடுனுமா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினிக்கு சரிந்தது செல்வாக்கு! அரசியல் கணக்கெடுப்பில் திடுக் திடுக்!

கடந்த பல வருடங்களாக விளக்கெண்ணையில் வாழைப் பழத்தை பிசைந்து மக்களுக்கு ஊட்டி வருகிறார் ரஜினி. ‘வருவேன்... வந்தாலும் வருவேன்’ டைப்பான இவரது அரசியல் பிரவேச பூச்சாண்டியை இனியும்...

Close