ரஜினிக்கு சரிந்தது செல்வாக்கு! அரசியல் கணக்கெடுப்பில் திடுக் திடுக்!

கடந்த பல வருடங்களாக விளக்கெண்ணையில் வாழைப் பழத்தை பிசைந்து மக்களுக்கு ஊட்டி வருகிறார் ரஜினி. ‘வருவேன்… வந்தாலும் வருவேன்’ டைப்பான இவரது அரசியல் பிரவேச பூச்சாண்டியை இனியும் நம்புவதற்கு தயாராக இல்லை மகாஜனங்கள். ஆனால் யாருமே எதிர்பாராத திசையிலிருந்து உள்ளே குதித்த கமல், அரசியல்வாதிகளுக்கு நாள்தோறும் கிலி ஏற்படுத்தி வருகிறார். இவர்களுக்கு இடையேயான இந்த வேற்றுமைக்கான ஆதரவும் எதிர்ப்பும் இப்போது வெளிப்பட்டுள்ளது.

குமுதம் வார இதழும் நியூஸ் 7 தொலைக்காட்சியும் இணைந்து மக்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறார்கள். அதில் ரஜினி, கமல், விஜய் குறித்த அரசியல் கேள்விகளுக்கு நெற்றிப் பொட்டில் அடித்தது போல வாக்களித்து கமல்ஹாசனை கை தட்டி வரவேற்கிறார்கள் மக்கள்.

திமுக- அதிமுக வுக்கு சவாலாக இருக்கப் போகும் நடிகர் யார்? என்ற கேள்விக்கு ஏராளமான வாக்காளர்கள் கமலுக்கே ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். கமலுடன் ஒப்பிட்டால் பல மடங்கு சரிந்தேயிருக்கிறது ரஜினியின் வாய்ஸ்.

மூன்றாவது இடத்திலிருக்கிறார் விஜய்.

6 Comments
 1. கருநாய் says

  மணல் மாஃபியா News7தமிழ், திருட்டு முன்னேற்ற கருநாய் அல்லக்கை குமுதம் சேர்ந்து நடத்திய கருத்து திணிப்பு.

 2. JOSEPH VIJAY says

  ”காமராஜர் ஆட்சின்னு நிறைய பேர் சொல்லிகிட்டு இருந்தாங்க. காமராஜரை கொண்டு வரமுடியல்லேயின்னு வருத்தத்திலே இருந்தாங்க. இப்போ வாழும் காமராஜர் ரஜினி மட்டும் தான். எளிமையான தலைவராக இருக்கும் தகுதி அவருக்கு மட்டும் தான் இருக்கு. இதுவரையிலும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து வென்றவர்கள், மற்றவர்கள் தொடங்கிய கட்சியில் இருந்து அனுபவம் பெற்று வந்தவர்கள். ரஜினி மட்டும் தான் தனியாக தன்னுடைய கட்சியை தொடங்கி அதை வெற்றிப் பெறச் செய்து முதல்வர் ஆவார். அந்தத் தகுதி அவருக்கு மட்டுமே இருக்கிறது. எல்லோருமே மை டப்பாவுடன் தான் அலையுறாங்க. தலைவர் ரஜினி மட்டும் தான் தமிழ்நாட்டில் இயல்பாக இருக்கிறார். மக்களோடு மக்களாக இருக்கிறார். மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்து இருக்கிரார்.
  ரஜினி நினைத்திருந்தால் 1996லேயே முதல்வர் ஆகியிருக்க முடியும். அப்போது நட்புக்காக விட்டுக் கொடுத்தார். இப்போது யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார். கடந்த 20 வருஷமா அரசியலில் தேர்ச்சி பெற்றுள்ளார். ரஜினியின் அரசியல் அனுபவத்தைச் சொல்ல சிவாஜி விழாவில் அவர் பேசியே பஞ்ச் போதும். தனது அனுபவத்தைக் கொண்டு நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்காகத் தான் அவர் அரசியலுக்கு வருகிறார். நாளைய முதல்வர் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான். யார் முதலில் வருகிறார் என்பது முக்கியமல்ல. ரேஸில் ஜெயிப்பது யார் என்பது தான் முக்கியம். அது ரஜினி தான். போருக்குத் தயாராகுங்கள் என்று அவர் சொன்னார். ரசிகர்கள் தயார் ஆகிவிட்டோம். அவர் தலைவர் நாங்கள் தொண்டர்கள்”

 3. raj says

  மொதல்ல, ரஜினி ஏமாத்துக்காரன். பயந்தாகோலி. அவன் மனைவியின் குறிகோல் காசு மட்டும். So, ரஜினி நல்லவனா ஆக சான்ஸ் இல்ல.

  1. Muthukumar says

   ரஜினி அரசியலுக்கு வரப்போவதை தெளிவாக கூறிவிட்டாலும், குதர்க்கவாதிகள் அவருடைய ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தம் கற்பித்து, இனி ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று சொல்லி வருகிறார்கள். ரஜினியின் அரசியல் கட்சி பெயர் அறிவிப்பை ரசிகர்கள் மட்டும் எதிர்பார்த்து இருக்க வில்லை. ”அவர் வரமாட்டாரா? வந்து இந்த அரசியல்வாதிகள் கொட்டத்தை அடக்க மாட்டாரா?” என்று சாமானிய மக்களுக்கு ஆவலோடு காத்திருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணுவதற்காகவே குழப்பவாதிகள் சமூக வலைத்தளத்திலும், மக்கள் மத்தியில் நேரிடையாகவும் ”ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். கமல் ஹாசனைப் பார்த்து பம்மி விட்டார்” என்றெல்லாம் இஷ்டத்திற்கும் அள்ளி விடுகிறார்கள். விமான நிலையத்தில், பத்திரிக்கையாளர் “களத்தில் பணியாற்ற எப்போது வருவீர்கள்” என்று கேள்வி கேட்கிறார். அதற்கு நோ கமெண்ட்ஸ் என்று எளிதாக ரஜினி சொல்லியிருக்க முடியும். ஆனால் அந்தக் கேள்வியின் முக்கியத்துவம் உணர்ந்து, திரும்பவும் கேட்டு உறுதி செய்து கொண்டார். பிறகு ” அதுக்கு இப்போதைக்கு அவசியம் இல்லைங்க” என்று மட்டும் கூறிவிட்டுப் போகிறார். அதை ஊடகங்கள் ”அரசியலுக்கு வர அவசியம் இல்லை”, “ரஜினி கதறல்” என்றெல்லாம் இஷ்டத்திற்குக் இட்டுக் கட்டி தலைப்புச் செய்தி வெளியிட்டார்கள். தமிழில் ”அவசியத்திற்கும் அவசரத்திற்கும்” வித்தியாசம் தெரியாத, தெரிந்தும் தவறாக செய்தி வெளியிடும் பத்திரிக்கைகளின் விசுவாசம் ஊர் அறிந்தது தானே! இந்தப் பொய்ச் செய்தியையே உடும்பாகப் பிடித்துக் கொண்டு, குதர்க்கவாதிகளும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். 25 வருடமாக இதைத் தானே செய்கிறார் என்று சமூகத் தளங்களில் கதை அளந்து வருகிறார்கள். ரஜினியை ஒரளவுக்காவது தெரிந்தவர்களுக்கு, அவரின் அரசியல் நிலைப்பாடு தெளிவாகவே தெரியும். முதல்வர் கருணாநிதி, சென்னை கடற்கரையில் சிவாஜி சிலை திறந்த போது ரஜினியும் உரையாற்றினார். கருணாநிதிக்கு தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி, அடுத்து அப்போது தான் முதல் தடவையாக எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்ற விஜயகாந்திற்கும் வாழ்த்துச் சொன்னார். கூடவே’ அரசியலில் வெற்றி பெற உழைப்பு மட்டும் போதாது. சரியான நேரம் வேண்டும்” என்றும் கூறினார். அதற்கு என்ன அர்த்தம்?. கடுமையான உழைப்பாளியாக இருந்தாலும் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதற்கு மேல் அவருடைய உழைப்புக்க்கு பலன் கிடையாது. ஏனென்றால், விஜயகாந்த் அரசியலில் ஈடுபட்ட நேரம் சரியானது இல்லை என்பதாகும். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருந்து, ஜெயலலிதாவுடன் கூட்டு சேராமல் தனியாகவே இருந்திருந்தால், இன்று அவருக்குத் தான் தமிழக அரசியலில் முதல் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், அவரோ நேரத்தையும் உழைப்பையும், மக்கள் ஆதரவையும் சரியான நேரத்தில் செலவிடாமல் வீணாக்கி விட்டார். ஆக, அரசியலில் வெற்றி பெறுவதற்கு, கட்சிப் பெயர் அறிவிப்பைக் கூட சரியான நேரத்தில் வெளியிட வேண்டியது மிக மிக முக்கியமானது. ஆகவே தான் ரஜினி தனது அரசியல் பயணத்தில் நிதானமாக அடிகளை எடுத்து வைத்து வருகிறார். இது தெரியாமல், அல்லது தெரிந்தும் வேண்டும் என்றே குதர்க்கவாதிகள் இஷ்டம் போல் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ரசிகர்களும் ரஜினி அபிமானிகளும் இப்படிப் பட்டவர்களிடம் செவி சாய்க்காமல் இருப்பதே நல்லது

  2. Daniel says

   தமிழ்திரைஉலகில் யாராலும் 37 வருடமாக அசைக்கமுடியாத சூப்பர்ஸ்டாராக நெ 1 ஸ்தானத்தில் இருப்பது ரஜினிதான் என்பது யாராலும் மறுக்கமுடியாதது.விமர்சனங்கள் அவரை மிஞ்சியதாக செய்தியாகவெளிவந்தாலும் ரஜினியின் மாஸ் அப்பீல் என்பது எம் ஜி ஆர்,விஜயகாந்த்,விஜய்,அஜித் போன்று போலியாக ஊடகங்களாலும்,பணம்செலவுசெய்தும்,தங்களை நிலைநிறுத்திக்கொள்ள கட்டமைக்கப்பட்டதில்லை.அதனாலேயே மேற்குறிப்பிடப்பட்ட நபர்களுக்கு இவரின் செல்வாக்கைப்பார்த்து பொறாமையும்,இவரின் இமேஜை சரிக்க அவர் அளவிற்கு இல்லை,இவர் மாதிரி அவரால் செய்யமுடியாது,அவரின் தைரியம் இவருக்கு வராது என்று பன்நெடுங்காலமாக விமர்சனங்களும்,அவர் தமிழ்நாட்டுக்கு குரல் கொடுப்பதில்லை,கன்னடர்,காவிரிப்பிரச்சினைக்கு குரல் கொடுக்கமாட்டார் என்று 35 வருடங்களாக ஊடகங்களை வைத்து கீழ்த்தரமாக எழுதியும்,பேசியும் வருகின்றனர்.இதில் இவரின் செல்வாக்கை பார்த்து பயந்த பெரிய அரசியல் தலைவர்களுக்கும் தொடர்புண்டு,தற்போது மட்டுமல்ல இவரை சினிமாவில் பெரிய வெற்றியாளர் என்றும் எழுதியதே இல்லை.அந்தந்த காலகட்டங்களில் இவரைவிட குறைந்த வயது,இவருக்குப்பின் திரையில் பிரவேசித்த நடிகர்களைவிட இவரை குறைத்து மதிப்பிட்டே எழுதுவர்,கமல்,பாக்கியராஜ்,டி.ஆர்,மோகன்,ராமராஜன்,விஜயகாந்த்,விக்ரம்,விஜய்,அஜித்,சூர்யா என்று இன்றுள்ள நடிகர்கள் வரை இவருடன் வியாபாரத்தில் நெருங்கவே முடியவில்லை,கலக்ஷனில் நினைத்துக்கூட பார்க்கமுடியாத இடத்தில் இருந்தாலும் இவர்களுடன் ஒப்பிட்டு சிறுமைபடுத்தியே வந்துள்ளன ஊடகங்களும் ஆனால் இதுவரை ஜெயலலிதாவை தவிர(அதுவும் சிவாஜிக்காகத்தான்) வேறு யாரையும் எதிர்த்ததில்லை பதிலும் அளித்ததில்லை.அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல் ஒரு குடம் பாலில் ஒருசொட்டு விஷம் கலந்தாலும் கெட்டுப்போகும் என்பது போல் எப்படியாவது ரஜினியை தொடர்ந்து சிறுமைபடுத்தி வந்துகொண்டே இருந்தால் அதுவும் சமூகவலைதளங்கள் மூலம் முகம் தெரியாத நபர்கள் போல் தொடர்ந்து கடுமையாகவும் விமர்சித்துகொண்டும் தமிழன் என்கிற ஆயுதத்தை கையில் எடுத்து உணர்சிபூர்வமாக எதிர்ப்பது போன்று எதிர்த்துவந்தால் அவரின் பிம்பம் சரியும் என்று தொடர்ந்து மறைமுகமாக செய்துவரும் நபர்கள் தற்போது ஒரு திரைப்படத்தை வைத்து அரசியல் செய்யும்போதும் நாகரீகமாக ரஜினி பதிலளித்துள்ளார்.ஆனால் அவரின் பல பிரச்சினைகளுக்கு யாரும் கைகொடுத்ததில்லை மாறாக அவரை காயப்படுத்தியே வந்துள்ளனர்.இது வரை யாரும் இவ்வளவு விமர்சனங்களுக்கு இது போல் அமைதியாக இருந்ததில்லை நேற்று கூட இன்னா செய்தாரை ஒருத்தல்” என்னும் குறளுக்கேற்ப அவர்கள் வெட்கிதலைகுனியும் அளவில் நாணயமாக நடந்துகொண்டுள்ளார்.ரஜினியாக இருப்பதின் கொடுமையை அனுபவிக்கின்றார் ரஜினி

 4. வெங்கடேஷ் முனிவேல் says

  இதோ வந்து விட்டது டிசம்பர் 12. நமக்கு முன்னால் தயாராகி விடுவார்கள் வயித்தெரிச்சல் பேர்வழிகள் பிறந்த நாள் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் டிவி சேனல்களை தங்கள் பதிவுகளில் வறுத்தெடுப்பார்கள். தலைவர் பிரமாண்ட பிறந்தநாளை பார்த்து வருத்தப் படும் வக்கிரம் பிடித்தவர்கள்.

  திடீரென்று பத்தாயிரம் கோடியுடன் தலைவர் படத்தை போட்டு, ரஜினி சொத்து மதிப்பு என்று கிளப்பிவிடுவார்கள். பால் அபிஷேகம் போட்டோவைப் போட்டு ’இன்னும் இவனுங்க திருந்தல’ என்ற பதிவுகளை, சொந்தமா நாலு காசு சம்பாதிக்கத் தெரியாதவர்கள் போடுவார்கள்.

  மானத் தமிழன் கொண்டாட மாட்டான் என தமிழ்த் தேசியம்ன்னு தாயா புள்ளையா பழகிக்கொண்டு இருக்கும் மக்களை பிரிக்கிற கூட்டத்திலிருந்து ஒரு குரல் வரும்.

  புயல் வெள்ளத்திற்கு என்ன செய்தார்ன்னு, என்னமோ இவங்க மட்டும் தான் சமூக சேவையை குத்தகைக்கு எடுத்துக்கிட்ட மாதிரி சிலர் கிளம்புவார்கள்

  ஏதாவது ஒரு ஹீரோயின் போட்டோவை தலைவர் படத்தோடு போட்டுட்டு இவருக்கு இவர் ஜோடியா? ஒரு அரைவேக்காட்டுப் பையன் பதிவு போடுவான்.

  நான் தலைவர் ரசிகன் அப்படினு அவசர அவசரமா வாடஸ் ஆப்பில் பேசி அவதூறுகளை பரப்பி விடுவான். ஆனா அவன் பிறப்பே ஒரு இழுக்குன்னு நாம சொல்ல வேண்டியது இல்லை.

  மோடி வாழ்த்தைக்கூட இந்த முறை பயங்கரமா முடிச்சு போடுவானுங்க. காவி ன்னு சாயம் பூசப்பார்ப்பாங்க. என்னமோ மோடி இந்த வருஷம் தான் புதுசா வாழ்த்து சொல்ற மாதிரி பேசுவாங்க.

  எங்கே ஒரு கோடி எனக் கேட்பான் ஒரு ஓட்டைவாயன். 2.0 வை புறக்கணிப்போம் ன்னு புறமுதுகு காட்டி ஓடும் கூட்டம் ஒரு பதிவு போடும்.

  ஹா ஹா.. எத்தனை வயித்தெரிச்சல்கள். இவர்கள் சார்ந்த கட்சி சங்கம் இயக்கம், தலைமையின் கையாலாகதத் தனத்தின் வெளிப்பாடுதான் இந்த அறை கூவல்கள் எல்லாம். தன் தலைவனுக்கு இது மாதிரி பெயரும் புகழும் இல்லையே என்ற பொறாமையின் உச்சம் தான் இந்த மாதிரி பதிவுகள். கோடிக்கணக்கில் இவருக்கு மட்டும் கூட்டம் எப்படி, இதை எப்படி உடைத்தெரியலாம் என்ற உள்குத்தின் வெளிப்பாடுதான் இது மாதிரி வேலைகள்.

  ரஜினி நல்லவர், ரஜினி ரசிகர்களும் நல்லவர்கள் என்று நாடும், நாட்டு மக்களும் நன்கு அறிந்து வைத்து உள்ளனர். செய்யாமல் செய்தி ஆக்குவதைவிட, செய்து விட்டு அதைச் செய்தி ஆக்காமல் இருப்பவர் தான் உத்தமர் ரஜினிகாந்த்.

  மகிழ்ச்சி… அட்வான்ஸ் ஹேப்பி பர்த் டே தலைவா!

Leave A Reply

Your email address will not be published.