கருப்பு ராஜா வெள்ளை ராஜா, நடுவில் ஒரு மஞ்சள் ரோஜா!
ஆல் ரவுண்டராக இருக்கிற அத்தனை பேருக்கும் இருக்கிற டிமாண்டுதான் மாஸ்டர் பிரபுதேவாவுக்கும். இந்திப்பட ஏரியா ஒரு பக்கம் வா… வா… என்று அழைக்க, அதற்கு சற்றும் சளைக்காமல் வாய்ப்புகளை வாரி வழங்குகிறது தமிழ்சினிமா. முக்கியமாக கல்வித்தந்தை ஐசரி கணேஷ், பிரபுதேவா ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். இவர்களது அடுத்த தயாரிப்பு கருப்பு ராஜா வெள்ளை ராஜா. விஷால் கருப்பு ராஜாவாகவும், கார்த்தி வெள்ளை ராஜாவாகவும் நடிக்க, படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.
ஹீரோக்கள்தான் இருவரே தவிர, ஹீரோயின் ஒருவர்தான். பெயர் ஷாயிஷா. அனுஷ்காவில் ஐம்பது சதவீதமும், தமன்னாவில் ஐம்பது சதவீதமும் கலந்த தங்க மிட்டாய் போலிருக்கிறார் பொண்ணு. ஜெயம் ரவி நடித்து ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் வனமகன் படத்திலும் இவர்தான் நாயகி. அதில் அவர் ஆடியிருக்கும் ஒரு டான்ஸ், பிரபுதேவா மாஸ்டரே புல்லரிக்கிற அளவுக்கு இருந்ததாம். நல்லவேளையாக கருப்பு ராஜா, வெள்ளை ராஜா படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே, இந்த வனமகன் ஆட்டத்தை பார்த்துவிட்டார்கள் கார்த்தியும் விஷாலும்.
“படத்துல எனக்கும் ஷாயிஷாவுக்கும் டான்ஸ் இல்ல. ஆனால் கார்த்தியோட ஒரு டூயட் இருக்கு. “கார்த்தி…இந்த பொண்ணுக் கூட நீ எப்படிதான் ஆடப்போறீயோ, செத்த…” என்றார் விஷால்! நேற்று சென்னையில் நடந்த க.ரா.வெ.ரா பிரஸ்மீட்டில்தான் இந்த தடதடப்பு.
பிரஸ்மீட் முடிந்த பின்பும் விஷால் ஷாயிஷாவை தனியாக அழைத்து சில நிமிஷங்கள் பாராட்டிவிட்டுதான் கிளம்பினார்.
செம்பருத்திப்பூவுக்கு செவப்புதான் அழகு! ஷாயிஷாவுக்கு செவப்போட ஆட்டமும் கலந்திருச்சே… ஊரே சேர்ந்து பன்னீர் தெளிக்காம விடாது.
https://youtu.be/wFlcgot8iyo