ஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு?

சினிமாவில் சீறும் சிறப்புமாக இருக்கவேண்டிய சிம்பு, சிக்கலும் பிக்கலுமாக இருப்பதற்கு யாரும் காரணமில்லை. எல்லாம் அவர் செயல்தான்!

மீண்டு வா தலைவா என்று அவரது ரசிகர்கள் அவ்வப்போது உசுப்பிவிட்டதால் தள்ளாடிய தேர், நிலைக்கு வந்திருக்கிறது! அடடா… தேதிகளை வேஸ்ட் பண்ணிட்டமே, எட்றா வண்டிய என்று கிளம்பிய சிம்பு, தன்னை வைத்து படம் எடுத்த முன்னாள் இயக்குனர்களுக்கு ரூட் மேப் போட்டு அழைக்கிறார். அப்படி வருகிற இயக்குனர்களிடம், தொட்டி ஜெயா பார்ட் 2 எடுக்கலாம்…. ஒஸ்தி பார்ட் 2 எடுக்கலாம் என்று தூண்டிலையும் வீசுகிறார். மீன் சிக்கியதோ இல்லையோ? சம்பந்தப்பட்ட இயக்குனர்களின் முகத்தில் சந்திர ஒளி.

இந்த ஒஸ்தி 2 வை தயாரிக்கப் போவது சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் என்கிற தகவலும் வருகிறது. தனுஷை வைத்து பட்டாஸ் எடுத்து வரும் அவர், சொல்லொணா குடைச்சல்களை அனுபவிக்கிறாராம். இதையெல்லாம் பார்க்கும் போது தனுஷுக்கு சிம்பு தேவலாம் என்று நினைத்தாரோ என்னவோ?

ரயில் பார்க்க ஆசைப்படுகிற அத்தனை பேரும், தண்டவாளத்தில் நின்றுதான் ரசிப்பார்கள் போல!

Read previous post:
இனிமே இப்படிதான்! விஷால் புது முடிவு!

Close