தீரனின் அதிகாரம்! திடுக்கிட்ட பாண்டிராஜ்?
பசங்க பாண்டிராஜுக்கும் பாப்புலர் ஹீரோ சிவகார்த்திகேயனுக்கும் முட்டிக் கொண்ட விஷயம் ஊருக்கே தெரிந்ததுதான். அதற்கப்புறம் அதே லெவல் ஹீரோக்களுக்கு கதை சொல்ல முயன்று வரும் பாண்டிராஜுக்கு அகப்படுவதெல்லாம் அஞ்சு பைசா முட்டாய்கள்தான். (விரைவில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம் இவர். பசங்க 3 ஆக இருக்குமோ?)
இந்த நேரத்தில்தான் நடுவில் ஒரு கிராஸ் லுக்! தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பின் சற்றே ஃபிரீயாக இருக்கிறாராம் கார்த்தி. பாண்டிராஜும் இவரும் சமீபத்தில் தொழில் ரீதியாக ஒரு மீட்டிங் போட்டிருக்கிறார்கள். தான் வைத்திருக்கும் அற்புதமான கதையொன்றை சிறு குறிப்பு வரைந்தாராம் பா.ராஜ்.
முழு திருப்தியை கண்ணில் காட்டினாலும், முழு ஸ்கிரிப்ட்டும் இருந்தால்தான் நடிக்கிறேனா, இல்லையான்னே சொல்ல முடியும் என்று கார்த்தி சொல்ல…. லேசான ஷாக் இவருக்கு.
நல்ல இயக்குனர் என்பதை இனிமேல்தானா நிரூபிக்க வேண்டும் பாண்டிராஜ்? உங்களுக்கெல்லாம் பசங்கதான் லாயக்கு. பசங்களோட அப்பாக்கள் அல்ல!
https://youtu.be/LCUUmNkLXq0