விமலுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட்! எப்படி சொல்றீங்க?
ஒரு நபரை தலைகீழாக புரட்டிப் போடுகிற வித்தை சினிமாவுக்கு மட்டுமே உண்டு. ஒரு கார் டிரைவராக தன் கேரியரை துவங்கிய விமல், அதற்கப்புறம் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக மாறியதெல்லாம் யானை மாலை போட்டு மந்திரியாக்கிய கதைதான். ஆனால் நல்லா போயிட்டு இருந்த வண்டி, தனக்கு தானே தாறுமாறாக எட்டாம் நம்பரை போட ஆரம்பித்ததுதான் ஏனென்றே புரியவில்லை.
நல்லவேளை…. சிக்கல் பலமாவதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்ட விமல், கொஞ்சம் கவனமாக கதை கேட்க ஆரம்பித்து அப்படங்களை தானே தயாரிக்கவும் இறங்கியது ‘துணிச்சலே உன் விலை என்ன?’ விவகாரம்தான். தற்போது அவர் நடித்து வரும் ‘மன்னர் வகையறா’ படத்தை பிரபல சிரிப்புப்பட இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கி வருகிறார்.
இதையடுத்து விமல் நடிக்கப் போவது இயக்குனர் எஸ். எழில் படத்தில்தான். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் வெற்றிக்குப்பின் எழில் மீது நம்பிக்கையோடு காத்திருக்கும் ரசிகர்களுக்கு, விமலின் இந்த முடிவு விசேஷமானது.
விமலும், சிவகார்த்திகேயனும் இதற்கு முன் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் ஒன்றாக நடித்தவர்கள். அதற்கப்புறம் எழிலே தொட முடியாத உயரத்திற்கு போய்விட்டார் சிவகார்த்திகேயன். விமல் மட்டுமே டச் பாயின்ட்டுக்குள் இருக்கிறார்.
இவரையும் அப்படியே மேலே ஏத்தி விட்ருங்க எழில்!
பின்குறிப்பு- தனது சம்பள பாக்கியை வற்புறுத்தி கேட்காமலே விட்டுவிடும் நல்ல மனசுக்காரர் விமலுக்கு, சினிமா தரவேண்டிய பாக்கியே பல லட்சங்கள் இருக்கிறதாம். இருந்தாலும் மனுஷன் எப்பவும் கூல்!
https://youtu.be/Dtd9ZMsNGEQ