சசிகுமார் கொலைக்காக கத்தி எடுக்கும் ரஜினி! பேட்ட கதை இதுதான்!

சில வருடங்கள் கழித்து அதே பழைய ரஜினி என்று உருமி மேள மனசுடன் உற்சாகமாகிக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். ‘கொல காண்டுல இருக்கேன். அப்படியே ஓடிப் போயிடு’ என்கிற அந்த ஒரு டயலாக்குக்கே அடித்தொண்டை வரள விசிலடிக்கும் ரசிகன், படத்தில் இதுபோல ஐம்பது டயலாக்குகள் இருந்தால் என்னாவான்? யெஸ்… அதுதான் நடக்கப் போகிறது.

இஸ்லாமியரான சசிகுமார் குடும்பத்தின் வளர்ப்பு பிள்ளையான ரஜினி ஒரு இந்து. சசி குடும்பத்தை தன் குடும்பமாகவே கருதுகிற ரஜினிக்கு ஒரு திடீர் அதிர்ச்சி. இந்து பெண்ணை காதலிக்கிற சசிகுமாரை அந்த பெண்ணின் குடும்பம் கூலிப்படையை வைத்துக் கொல்கிறது. கடும் கோபத்திற்கு ஆளாகும் ரஜினி, ஒரு கல்லூரியில் வார்டனாக சேர்கிறார். அங்கிருந்தபடியே சசியை கொன்ற ஒவ்வொருவரையும் தேடி தேடி போட்டுத் தள்ளுகிறார். சசிக்கு த்ரிஷா ஜோடியாகவும், த்ரிஷாவின் அப்பாவாக இயக்குனர் மகேந்திரனும் நடிக்கிறார்கள்.

ரஜினியை படு இளமையாகவும் அதே பழைய உற்சாகத்தோடும் காட்ட வேண்டும் என்பதற்காக அதிகம் மெனக்கெட்டாராம் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தை முழுசாக பார்த்த ரஜினி, ‘மீண்டும் தயாரா இருங்க. சீக்கிரம் நல்ல செய்தி சொல்றேன்’ என்று கூறியிருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜிடம்.

ரஜினியை மீட்டெடுத்த கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜினி ரசிகர்கள் செய்யப் போகும் கைமாறு என்ன? வெறும் கைத்தட்டல்தானா, அல்லது ஏதேனும் மாநாடு நடத்தி பாராட்டுவீர்களா?

புக் பண்ணுங்கய்யா நேரு ஸ்டேடியத்தை!

ஆங் சொல்ல மறந்தாச்சு. விஜய் சேதுபதி மாணவர்களிடம் போதை மருந்து விற்பவராக நடிக்கிறாராம்.

Read previous post:
ஐயப்ப பக்தர்களுக்கு 18 ம் படி! வசீகரனுக்கு 10 வது படி! பெருமைமிகு தமிழர் விருது!

Close