உலகம் முழுக்க ரஜினி! உள்ளூரில் அஜீத்! கட்டி உருளும் கலெக்ஷன் பஞ்சாயத்து!

‘ரெண்டு படமும்தான் நல்லா போவுதே… அப்பறம் ஏன்ப்பா அடிச்சுக்கிறீங்க?’ என்று நடுவில் நுழையும் நாட்டாமைகள் யாராவது கேள்வி கேட்டு பிரித்துவிட்டால்தான் உண்டு. இல்லையென்றால் இந்த சண்டையை அடுத்த ரிலீஸ் வரைக்கும் இழுத்துக் கொண்டு திரிவார்கள் போலிருக்கிறது.

படம் வெளிவந்த ரெண்டு மணி நேரத்திற்குள், ‘கலெக்ஷன் ரிப்போர்ட் என்னங்க?’ என்று கதறினார்கள் ரசிகர்கள். இந்த ஆர்வத்தை பயன்படுத்திக் கொண்ட டிராக்கர்ஸ், தரிசு நிலத்தில் உழவு விட்ட டிராக்டர் போல விளாசி தள்ளினார்கள் இஷ்டத்துக்கு. விட்டால் ஆயிரம் கோடி கலெக்ஷன் என்று சொன்னால் கூட ஆ வென்று வாயை பிளந்து கொண்டு நம்புகிற ரசிகர்களும்தான் இருக்கிறார்களே!

இந்த பேய் கூச்சலுக்கு கொஞ்சம் சாம்பிராணி போட்டு அடக்குவோம் என்று நினைத்திருக்கலாம். பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், பேட்ட மற்றும் விஸ்வாசம் கலெக்ஷன் பற்றி ஒரு பேட்டி அளித்தார். பொல்லா பாவிங்க அதற்கப்புறமும் சும்மா இருந்தார்களா என்றால் அதுதான் இல்லை. விஸ்வாசம் கலெக்ஷன் பற்றி அவர் குறிப்பிட்டதை அப்படியே கட் பண்ணிவிட்டு, பேட்ட பற்றி சொன்னதை மட்டும் வெளியிட்டார்கள்.

இந்த நிலையில்தான் விஸ்வாசம் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்த கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ், ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் விஸ்வாசம் கலெக்ஷன் 125 கோடி! (இதற்கு பேட்ட தரப்பில் என்ன பதில் வைத்திருக்கிறார்களோ?)

இந்த நம்பர் கணக்கெல்லாம் தாண்டி ஒரு நிஜம் இருக்கிறது. அதுதான் இது.

ஓவர்சீஸ் வசூலை பொறுத்தவரை ரஜினிதான் டாப். தமிழக வசூலை பொறுத்தவரை அஜீத்தே டாப்! இப்படி ஒரு வரியில முடிய வேண்டிய விஷயத்தை ஏன்பா முடிய பிய்ச்சுக்குற அளவுக்கு குழப்புறீங்க?

Read previous post:
புதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..!

Close