இளையராஜா இசை நிகழ்ச்சி! விஜய் அஜீத்தை அழைக்க முடிவா, இல்லையா?

இன்னும் பத்து நாட்கள் கூட இல்லை. இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான கோலாகலத்தில் குதூகலம் கம்மியோ என்று அஞ்ச வைக்கிறது அமைப்பாளர்களின் அசைவு! தமிழ்சினிமாவின் டாப் ஹீரோக்களான ரஜினி, கமலை சந்தித்த விஷால், இன்னும் அஜீத், விஜய் இருவரையும் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கூட கேட்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

ஒருவேளை இருவரையும் நேரில் சென்று அழைக்கிற ஐடியாவே இல்லை போலிருக்கிறது. அது போகட்டும்… ஆனால் எல்லா முன்னணி நடிகர் நடிகைகளுக்கும் அழைப்பிதழ் நேரில் போய் சேர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம் விஷால். இதற்கென முறையான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த நிகழ்ச்சி நடைபெற பெருமளவு டொனேஷன் கொடுத்திருக்கிறது புக் மை ஷோ நிறுவனம்.

நாங்களே ஆன் லைன்ல டிக்கெட் விற்கப் போறோம். அப்புறம் இருக்கு இந்த மாதிரி வாரி சுருட்டி தானே திங்குற கம்பெனிக்கெல்லாம் என்று அடி பிடிவாதமாக இருந்த விஷால், அதற்கான முதல் கல்லை கூட நடவில்லை. அப்படியொரு வெப்சைட்டை நடத்துவதில் என்ன சிக்கலோ, அதை கிட்ட தட்ட கை விட்டுவிட்டதாகவே தெரிகிறது. எப்படி?

இந்த இசை நிகழ்ச்சிக்கு திடீரென இரண்டு கோடி தேவைப்பட்டதாம். அங்கே இங்கே கை நீட்டுவானேன்… நம்ம காசை முழுசா தின்ற கம்பெனியின் தலையிலேயே கை வைப்போம் என்று முடிவெடுத்திருக்கிறார். அதிரடியாக கேட்டு இரண்டு கோடி நன்கொடை வாங்கினாராம். அதில் ஒரு கோடியைதான் இசைஞானிக்கு ஒரு பகுதியாக கொடுத்திருக்கிறார்கள். மீதியை நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் தர வேண்டுமாம்.

ஏ… யப்பாவ். டிக்கெட்டை கூட்டம் கூட்டமா போய் வாங்குங்கப்பா. அப்பதான் ராசாவை கிளப்பி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு கொண்டுவர முடியும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உலகம் முழுக்க ரஜினி! உள்ளூரில் அஜீத்! கட்டி உருளும் கலெக்ஷன் பஞ்சாயத்து!

Close