சந்தானம் மேடையில் தனுஷ்! எலி எதற்கு எட்டு முழம் வேட்டி கட்டுச்சு?
சிம்பு சந்தானம் தனுஷ் மூவரும் கலந்து கொண்ட விழா என்பதால், சந்து முனையிலும் சக்கப் போடு போட்டது சக்கப்போடு போடு ராஜா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. தமிழ் சினிமாவின் முப்பெரும் மன்னர்களாச்சே? அதனால்தான் இந்த அலப்பறை. ஆனால் நிகழ்ச்சி நிரல்படி அங்கு தனுஷ் வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்கிறார்கள். தானாகவே போன் பண்ணி சந்தானத்தை வாழ்த்தினாராம் தனுஷ். என்னப்பா… ஆடியோ நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட்டா வர மாட்டேனா என்று அவரே கேட்க, இவர் என்ன பதில் சொல்ல முடியும்? வாங்க வாங்க ப்ளீஸ் என்றாராம்.
இப்படி வலிய வந்து எலி கட்டிய எட்டு முழ வேஷ்டிதான் அந்த விழாவில் தனுஷின் பிரசன்ட்டேஷன். ஏன்… தனுஷுக்கு வேலையே இல்லையா? ஏன் தன் பொன்னான நேரத்தை விட்டுவிட்டு இங்கு வந்து செலவிட வேண்டும்?
இப்போது சிவகார்த்திகேயன் மீதுதான் கொலவெறியில் இருக்கிறார் தனுஷ். தன் கம்பெனிக்கு கால்ஷீட் தரவில்லையே என்கிற அதிகபட்ச கோபம்தான் அது. சந்தானத்தின் சக்கப்போடு போடு ராஜா படமும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படமும் ஒரே நாளில் திரைக்கு வரப்போகிற தகவல் அறிந்ததும் சந்தானத்திற்கு சப்போர்ட் பண்ணி சிவாவை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தாராம்.
அதனால்தான் இந்த ஆவேச அட்டன்டன்ஸ்!
வாழை குலை தள்றதும், பலா பழம் சுளைத் தள்றதும் பிறருக்காக. ஆனால் மனுஷன்தான் குறட்டை விட்டால் கூட அடுத்தவன் தூக்கத்தை கெடுப்பதற்காக இருக்கும். நல்லா வருவீங்க சார் எல்லாரும்!