விஜய்க்கு வில்லன் ஆன பொலிட்டீஷியன்!

ஹீரோ மட்டுமல்ல, வில்லன்களும் விசேஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் டைரக்டர்கள். இல்லையென்றால், ரஜினி படத்திற்கு ஒரு அக்ஷய் குமாரும், அஜீத் படத்திற்கு ஒரு விவேக் ஓபராயும் ஏன் வர வேண்டும்? அப்படியொரு வெயிட் இருந்தால்தான், படத்திற்கும் ஒரு ஹைட் கிடைக்கும் என்று நம்புகிறது தயாரிப்பு ஏரியா.

அந்த வகையில் ஒரு விசேஷ மனிதரை விஜய் 62 படத்தில் வில்லனாக்கியிருக்கிறார்கள். அங்காடித் தெரு படத்தில் அண்ணாச்சியாக நடித்த பழ.கருப்பையாதான் அவர். படத்தில்தான் இவர் அண்ணாச்சி. நிஜத்தில் இவர் ஒரு அப்பச்சி. அவருக்கு நெருக்கமானவர்கள் அப்படிதான் அழைக்கிறார்கள் பழ.கருப்பையாவை.

தமிழ்நாட்டின் அநேக கட்சிகளில் தாவி தாவி பயணித்திருந்தாலும், நிஜமான மக்கள் போராளி அவர். அதிமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினாராகவும் இருந்தவர். அதே கட்சி தலைமையால் அசவுகர்யத்துக்கு ஆளானவரும் கூட. சமீபத்தில் தந்தி டி.வி பேட்டியில் மைக்கை வீசியெறிந்துவிட்டு, நெறியாளர் ரங்கராஜ் பாண்டேவையும் திட்டித்தீர்த்தபடி வெளியேறிய துணிச்சல்காரர்.

இவரைதான் விஜய்க்கு வில்லனாக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அரசியலில் கரை கண்ட பழ.கருப்பையா ஓய்வு நேரத்தில் விஜய்க்கு அரசியல் நெ ளிவு சுளிவுகளை கற்றுக் கொடுத்தால் கூட ஆச்சர்யமில்லை.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அதிகாலை ஆறு மணி! அலறவிட்ட சிம்பு!!!!

Close