இரண்டு கோடிய தொடுங்க… அப்புறம்தான் மற்றதெல்லாம்! ரஜினியின் திடீர் பிளான்?
நெற்றியில் வைக்கப்படுவது பொட்டா, சுண்ணாம்பா? என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறான் ஒவ்வொரு தமிழனும். கிராமபுறங்களில் கையில் கொத்தாக அப்ளிகேஷன் ஃபார்ம்கள் சகிதம் அலையும் திடீர் அப்ரசண்டுகள், பார்கிறவர்களிடமெல்லாம் ‘கையெழுத்து போடு… கை நாட்டு வை…’ என்று இம்சித்து வருவதால், ஆங்காங்கே அய்யோ குய்யோ!
இவர்கள் எல்லாருமே ரஜினி, கமல், விஜய்யை தலைவராக கொண்ட இளம் ரத்தங்கள் என்பதுதான் ஷாக். யார் கட்சியில் சேர்வது? யாருக்காக சேர்வது? என்பதே புரியாமல் கடும் குழப்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள் அப்பாவி ஜனங்கள்.
ஆப் ஆரம்பித்த சில மணி நேரத்திலேயே அது ஜாம் ஆகிற திரண்டு வந்து ஆதரவளித்தார்கள் ரஜினிக்கு. ஆனால் கமலின் ஆப், அந்தளவுக்கு நிறையவில்லை என்கிறது ஒரு தகவல். அதனால் பிரின்ட்டட் அப்ளிகேஷன்களை அள்ளிக் கொடுத்து, ஆளை பிடிங்கப்பா என்று கட்டளையிடப்பட்டுள்ளதாம் மய்யம் ஏரியாவில்.
இரண்டு கோடி பேர் கட்சியில் இணைந்த பிறகுதான் மற்ற அறிவிப்பெல்லாம். அதுவரைக்கும் நமது காவலர்கள் தேடி தேடி ஆள் பிடிங்க என்று உத்தரவு போயிருக்கிறதாம் ரஜினியிடமிருந்து.
இந்த இரண்டு பேர் கொடுக்கிற குடைச்சல் போதாது என்று விஜய்யும் சைலன்டாக தனது ரசிகர்களை மன்றத்திற்கு ஆள் சேர்க்க சொல்லி உத்தரவிட்டிருப்பதால் மொத்த தமிழ்நாடும் திக் பிரமை பிடித்தது போல தடுமாறிக்கிடக்கிறது.