நாக்கை சுழற்றி சுழற்றி கெட்ட வார்த்தை பேசிய பூர்ணா! சவரக்கத்தி சவால்!

‘சவரக்கத்தி’ என்றொரு தலைப்பை வைக்கவே தனி துணிச்சல் வேண்டும். அப்படியொரு தலைப்புடன், அதிர வைக்கும் கதையுடன் வந்திருக்கிறார் ஜி.ஆர்.ஆதித்யா. மிஷ்கினின் தம்பி. (அப்ப துணிச்சல் இருக்கும்)

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் பிரபல இயக்குனர் ராம் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதற்கு சற்றும் குறைவில்லாத கேரக்டரில் நடித்திருக்கிறார் பூர்ணா. முதலில் இந்த கேரக்டரில் நடிக்க நான்கு பெரிய நடிகைகளிடம் அப்ரோச் செய்தார்களாம். கதையை கேட்டவுடனே பின்னங்கால் பிடறியில் இடிக்க ஓடியிருக்கிறார்கள் அவர்கள்.

நல்லவேளை… உங்களை வச்சு இந்தப்படத்தை இயக்கல. அப்படி எடுத்திருந்தா இந்தப்படம் குட்டிச்சுவரா போயிருக்கும் என்றார் நிகழ்ச்சிக்கு வந்திருந்த மிஷ்கின். அப்படியே மிஷ்கின் சொன்ன மேலும் சில தகவல்கள், பூர்ணாவுக்கு வைக்கப்பட்ட பூர்ணகும்ப மரியாதை.

அவரே சொந்தக்குரலில் பேசியிருக்கிறார். எனக்கு தெரிஞ்சு ஒரு மலையாள ஹீரோயின் இவ்வளவு அழகா தமிழ்ல டப்பிங் பேசியிருப்பது இதுதான் முதல் முறைன்னு நினைக்கிறேன். அது மட்டுமில்ல… படம் முழுக்க நிறைய கெட்ட வார்த்தைகள் பேசியிருக்கார். அதுக்காக நிறைய ட்ரெயினிங் எடுத்துகிட்டார் என்றார் மிஷ்கின்.

கடவுளுக்குப் பின் எல்லாரும் அண்ணாந்து பார்க்குறது சினிமா திரையைதான் என்று மிஷ்கின் சொன்னதை, யார் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்களோ? எச். ராஜா காதுக்கு கொண்டு போனால், சவரக்கத்திக்கு இலவச பப்ளிசிடி தயார்.

இப்பல்லாம் சாமி கோவிக்குதோ, இல்லையோ? சாமிக்காக கோவிச்சுக்குற ஆசாமிகளின் அட்ராசிடிதான் அபாயக் கோடாக நிமிர்ந்து நிற்கிறது சினிமாவுக்கும் சினிமாக்காரர்களுக்கும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அந்த நூற்றைம்பது பேருக்கு நன்றி! இஞ்ச் பை இஞ்ச் இமான்!

ஃபர்ஸ்ட் புளோர் ஏறியவுடன், படியை இடிப்பதே முதல் வேலை என்று இருப்பவர்கள் ‘சினிமாக்காரர்களா, அல்லது அரசியல்வாதிகளா?’ என்று பட்டிமன்றமே வைக்கலாம். அந்தளவுக்கு பொங்கி வழியும் நன்றியுணர்ச்சிக்கு இவ்விரு...

Close