தள்ளிப்போகும் அஜீத் படம்! சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன்!

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்கிற தலைப்பு சிம்புவுக்கு சூட் ஆகுதோ, இல்லையோ? சிவகார்த்திகேயனுக்கு மட்டும் எப்போதும் சூட்! கொஞ்சம் லேட்டா வந்தாலும் பரவால்ல. வர்ற நேரத்தில் போட்டியில்லாம இருக்கணும். அப்படியொரு பாலிஸியை கடைபிடித்து அடிக்கடி வெற்றியை ருசிக்கிற சிவா, இந்த முறை ஏன்யா இப்படி சொதப்புனாரு? என்கிற கேள்வி எல்லாருக்கும் எழுந்திருக்கும். ஏன்?

மே 1 ந் தேதி சிவகார்த்திகேயன் நடித்து ராஜேஷ் இயக்கிய ‘மிஸ்டர் லோக்கல்’ திரைக்கு வருகிறது. அதே நாளில்தானே அஜீத்தின் பிங்க் ரீமேக் வருவதாக இருந்தது. அங்குதான் சடர்ன் பிரேக்!

பிங்க் ரீமேக் படப்பிடிப்பில் அவ்வளவு வேகமில்லையாம். மே 1 ந் தேதி அஜீத் பிறந்த நாளில் திரைக்கு வர வேண்டும் என்று முடுக்கிவிடுகிற தயாரிப்பாளரும் அமையவில்லை. எனவே நிதானமாக ஏப்ரல் மே விடுமுறைக்கு போய் விடலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.

வழக்கம் போல தனி கிரவுன்டில் நின்று சிக்சராக அடித்துத் தள்ளப் போகிறார் சிவா.

Read previous post:
Super Deluxe – Official Trailer

https://www.youtube.com/watch?v=3-Xq_Zz3nPA&feature=youtu.be

Close