டைவர்ஸ் மனைவி! தயவு காட்டிய பிரகாஷ்ராஜ்!

சட்டத்திற்கு வேண்டுமானால், மனசோ மண்ணாங்கட்டியோ இல்லாமலிருக்கலாம். ஆனால் சட்டத்தைத் தாண்டிய உறவுக்கு? ஏதோ ஒரு கோபத்தில் டைவர்ஸ் செய்துவிட்டாலும் லலிதகுமாரியின் வாழ்வில் தனக்கும் அக்கறை இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார் பேரன்பு கொண்ட பிரகாஷ்ராஜ்.

ஏன் பிரிந்தார்கள்? எதற்காக இன்னொரு கல்யாணம் செய்து கொண்டார் என்பதெல்லாம் அவரவர் பர்சனல். ஆனால் பிரகாஷ்ராஜ் செய்திருக்கும் ஒரு காரியம், நாடெங்கிலும் சட்டத்தால் பிரிந்திருக்கும் தம்பதிகளுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்லியிருக்கிறது.

வேறொன்றுமில்லை… லலிதகுமாரி இப்போதெல்லாம் நடிப்பதில்லை. ஆனால் குடும்ப வருமானத்திற்கு வழி வேண்டுமல்லவா? அவரே ஒரு சீரியல் தயாரிக்கலாம் என்று நினைத்திருந்தாராம். ஆனால் அதற்காக நிதி ஒதுக்கும் சேனல் வேண்டுமே? அங்குதான் பிரகாஷ்ராஜின் ஒயிட் மனசு வெளிப்பட்டது.

தமிழில் விரைவில் வரவிருக்கும் ஒரு சேனலை தொடர்பு கொண்டவர் தனது முன்னாள் மனைவி லலிதகுமாரிக்கு ஒரு ஸ்லாட் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டாராம். அம்மாம் பெரிய அவரே கேட்டாச்சு. அப்புறம் என்ன? நிதி ஒதுக்கித் தந்திருக்கிறார்கள்.

இனி நல்லபடியாக இயங்குவது லலிதகுமாரியின் பொறுப்பு!

1 Comment
 1. Kannank says

  Unga friend suresh kamatchi nalla movie publicity pannurar ????
  Kathai leakaam.yappa ???? vishal reasonaam

  Some people want to be in limelight he is using vishal because v is active
  I have seen all his interview he makes sure to tell the movie name and he is the director and then curse vishal( his speech are third grate) hope he learn a lesson.

  Time will tell.
  Tamil Tamil Tamil telungan

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத் பிரபுதேவா! அடிக்கடி சந்திக்கும் மர்மம் என்ன?

Close