ரஜினி அஜீத் விஜய் படமா இருந்தாலும் இனி 300 தியேட்டர்தான்! சங்கம் எடுத்த அதிரடி முடிவு?

ஐயா கண்ணுவுக்கு ஒரு உருண்டை… அரக்கனா இருந்தா மலையே உருண்டை! இப்படிதான் அமைகிறது பெரிய படங்களின் வரவு. ரஜினி, விஜய், அஜீத் படங்கள் வரும்போதெல்லாம் ஒரு சூறாவளி போல மொத்த தியேட்டர்களும் ஒரே ஸ்வாகா! தமிழ்நாட்டிலிருக்கிற ஆயிரத்து சொச்ச தியேட்டர்களிலும் ஒரே படம். வேறு படங்களுக்கு கதவு திறக்க விரும்புவதில்லை தியேட்டர் காரர்கள்.

அந்த நேரத்தில் திரைக்கு வருகிற படம் ஓடி முடிந்து கல்லா கணக்கு செட்டில் ஆகிற வரைக்கும் வேறு படங்கள் உள்ளே நுழையவே முடியாது. இந்த கொடூரத்திற்குதான் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று துடியாய் துடித்தார்கள் தயாரிப்பாளர்கள். தமிழ்சினிமா பெரு முதலாளிகளின் கையில் சிக்கிக் கொண்டு தவிப்பதை, விஷால் பீரியடிலாவது நிறுத்திவிட வேண்டும் என்று துடித்தவர்களுக்கு ஒரு நல்ல முடிவு கிட்டியிருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கம் அண்மையில் கூடியது அல்லவா? செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் பிரபல தயாரிப்பாளர்கள் தாணு, எஸ்.ஏ.சி, போன்றவர்கள் கூடிய கூட்டம் காரசாராமாகவே இருந்திருக்கிறது. அதில்தான் இனி ரஜினி, விஜய், அஜீத் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களின் படங்களை 300 தியேட்டர்களுக்கு மேல் திரையிடக் கூடாது என்ற அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ரிலீஸ் ஆகிற மற்ற படங்களுக்கும் தியேட்டர்கள் அமைய வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு சலசலப்புகள் எழுந்தாலும், உறுதியாக இதை நடைமுறை படுத்திவிட வேண்டும் என்று சங்கம் நினைக்கிறது. இதுபோன்ற இன்னும் நிறைய நல்ல திட்டங்களை இந்த கூட்டத்தில் எடுத்திருக்கிறார்கள்.

இவை எல்லாம் பேச்சளவில் முடியாமல் செயல் அளவிலும் தொடர்ந்தால், தமிழ்சினிமா பொங்கும் பூம்புனல் ஆகிவிடும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் வில்லன்கள் மனசு வைக்கணுமே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
குற்றவாளிக் கூண்டில் கோடம்பாக்கம்!

https://www.youtube.com/watch?v=E_dMY72h3mI

Close