சத்யம், ரோகிணி, அபிராமிகளுக்கு செக்!
இனி அந்த குழுமங்களில் புதுப்படங்கள் வருமா?
இப்போது சினிமா, புண் வந்து புரையோடிக் கிடப்பதற்கு முழு முதல் காரணம் யார்? எது? எங்கே? எப்படி? இப்படி மொத்தமாக விடை தேடக் கிளம்பிய தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஷாக்கோ ஷாக். இவ்வளவு நாளாக நம்மிடம் 600 கோடிக்கும் மேல் பிடுங்கித் தின்ற அந்த சர்வீஸ் புரவாய்டருக்கும், இந்த தியேட்டருக்கும் தொழில் தொடர்பு உண்டு. இப்படி கொடுக்கப்பட்ட பணத்தில் முக்கால்வாசி இங்குதான் போயிருக்கிறது என்பதையெல்லாம் கண்டு பிடித்துவிட்டார்களாம்.அதுமட்டுமல்ல… இந்த திருட்டுக்கு உடந்தையாக இருந்த ரோகிணி, அபிராமிகளுக்கும் செக் வைத்துவிட்டார்கள். தயாரிப்பாளர்களில் முக்கால்வாசி பேர் கூடிய கூட்டத்தில் இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? என்று விஷால் கேட்டதற்கு, ‘யாரும் படம் கொடுத்து உதவக் கூடாது’ என்று குரல் வர… அதையே சத்திய பிரமாணமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
நாள் செல்ல செல்ல ஒற்றுமை உடையும் என்று நினைத்தவர்களுக்கு மேலும் மேலும் ஷாக். ‘அங்க ரிலீஸ் பண்றதுதான் பிரஸ்டீஜ்’ என்று பேசிவந்த தயாரிப்பாளர்கள் கூட, ‘அது இல்லேன்னா செத்தா போயுடுவோம். விட்டுத்தள்ளுங்க. லிஸ்ட்லேர்ந்தே தூக்குங்க’ என்றெல்லாம் பொங்கினார்களாம்.
இதையடுத்து, கிளிய குரங்காக்கி, குரங்கை சிரங்காக்க நினைத்த சூத்திரதாரிகள் எல்லாம் இப்போ கடும் அதிர்ச்சியில்.
மேற்படி குழுமங்களுக்கு சொந்தமான சுமார் 80 தியேட்டர்கள் இதனால் காற்று வாங்கக் கூடிய சூழ்நிலை வரலாம்.
ஏன்… ரஜினி படத்தை கமலாவுல போட்டா கண்ணுக்கு புலப்படாதா என்ன?