ஒரே மேடையில் ராதிகா விஷால்? குறையும் இடைவெளி! அதிரும் கரவொலி!
பாம்புக்கும் கீரிக்கும் சண்டை வரலாம். அது கால காலமாக நடக்கிற ஜென்ம ஃபைட்! ஆனால் பதவிக்காக முறைத்துக் கொள்கிறவர்கள் அந்த பதவி காலம் முடிவதற்குள் கை கொடுத்துக் கொள்வதுதான் நாகரீக அரசியல். ஆனால் இந்த இரண்டிலும் சேராத ஒரு புது வகை ஃபைட்தான் ராதிகா-விஷால் பைட்!
ராதிகாவின் கணவர் சரத்குமாரின் பதவியை பிடுங்குவதற்காக நடிகர் சங்க அரசியலில் குதித்தார் விஷால். புதுக் குடையில் மழை நீர் ஒட்டாதது போலவே அழுக்கும் அவதூறுகளும் ஒட்டாமல் நனைந்தார் விஷால். எல்லாரும் வாழ்த்து மழை பொழிந்தார்கள். நடிகர் சங்கத்தின் செயலாளர் ஆகிவிட்டார் அவர். அதற்கப்புறமும் ஃபைட் நிற்கவில்லை. சரத்குமாரை நடிகர் சங்கத்தை விட்டே நீக்கினார்கள். வழக்கும் பதியப்பட்டது. ராதிகாவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விஷாலை குறை சொல்லிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில்தான் ஒட்டுமொத்த சிலுவையிலும் ரத்தம் துடைக்கக் கிளம்பியிருக்கின்றன சில விரல்கள். யெஸ்… நடிகை ராதிகா சினிமாவில் நடிக்க வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க விழாவாக கொண்டாட முடிவெடுத்திருக்கிறது ராடன் டி.வி. நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்வில் தமிழ்சினிமாவே திரண்டு வந்து ராதிகாவை பாராட்டப் போகிறது. அங்குதான் விஷாலையும் வரவழைக்கிற முயற்சியை எடுத்திருக்கிறார்கள் சிலர்.
சுண்டெலி மலையை குடைவது கூட சுலபம். இந்த ‘ரைவல்’ ரைபிள்களின் மனசை குடைந்து சம்மதம் வாங்குவது பெரும் சிரமமாச்சே என்று நினைத்தவர்களுக்கு பேரதிர்ச்சி. இந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க சம்மதித்துவிட்டாராம் விஷால்.
எவ்வளவு நாளைக்குதான் நெருப்புல அப்பளம் சுடுறது? ஒரு மாறுதலுக்காக ஐஸ்ல குளோப்ஜாமூன் செய்ங்க சொந்தங்களே!