புல்லரிக்குதே உங்க தமிழ் பற்று?

 
“தமிழ் மொழி எனக்கு கடினமாக இருந்தாலும், அதன் மீது நான் காதல் வயப்பட்டிருக்கிறேன்! விரைவில் வெளியாக இருக்கும் ராஜா மந்திரி திரைப்படம் மூலமாக தான், தமிழ் ரசிகர்கள் என்னை எவ்வாறு ஏற்று கொள்கிறார்கள் என்பது தெரியும்”, என்கிறார் கேரளத்து அழகு புயல் ஷாலின் சோயா. இயக்குனர் சுசீந்தரனின் உதவியாளரான உஷா கிருஷ்ணன் இந்த படத்தை இயக்க, Etcetera Entertainment V மதியழகு, R ரம்யா மற்றும் இணை தயாரிப்பாளர் PG முத்தையா ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். “இந்த படத்தில் நான் நடிக்க தொடங்கியதுமே, எனக்கு வேறு மொழிகளில் இருந்து வாய்ப்புகள்  வந்தன. ஆனால் முதலில் தமிழக மக்கள் என்னை ஏற்று கொண்டால் தான் மற்றதை பற்றி யோசிக்க முடியும்”, என்கிறார் ஷாலின். மேலும் படத்தின் கதையை பற்றி அவர் கூறுகையில், “அண்ணன் – தம்பி இருவர்க்கும் இடையே ஆன உறவை எதார்த்தமாக கூறும் படம் தான் ‘ராஜா மந்திரி’. கலையரசன் மற்றும் காளி வெங்கட் நடிக்கும் இந்த படம் முற்றிலும் நகைச்சுவை அம்சங்களை கொண்டது” என்று சொல்கிறார் ஷாலின் சோயா. நடிப்பு மட்டும் இல்லாமல், இயக்கத்திலும் அதிக ஆர்வம் கொண்டவர் ஷாலின். தனது கல்லூரி காலங்களில் பல குறும்படங்களை இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்கும் ஷாலின் சோயாவிற்கு வெற்றி நிச்சயம் என்று உறுதியாக சொல்லாம்.
 
“I’m curious to know how audiences will receive me!” –  Raja Mandhiri debut Shaalin Zoya
Malayalam film and TV actress Shaalin Zoya’s tamil debut Raja Mandhiri is hitting the silver screen soon. “Even though I face a language barrier, I love Tamil films. I’m curious to know how audiences will receive me after the release and I would love to explore the Tamil film industry,” says Shaalin. Directed by Usha Krishnan, the film also stars Kalaiyarasan and Kaali Venkat. The actress, who had been paired with Kalaiyarasan, feels him to be a very friendly and supportive co-star. “At Cochin, director Usha narrated the script, which I really liked and immediately agreed to be part of it. When I signed the project, I don’t know anyone from the team. It was on the sets that I got to know Kalai and about his work. I thoroughly enjoyed working with a young team,” said the beautiful Shaalin. Talking about the film,“This is an out-and-out entertainer that focuses on the relationship between two brothers, played by Kalai and Kaali Venkat,” she said. Apart from acting, the actress also directed a short film. “I’d love to direct, but the process will take some time,” says the elegant Shaalin. The film is produced by V. Mathiyalagan, R Ramya of Etcetera Entertainment and co-produced by PG Muthaih of PG Media Works.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தமிழக தேர்தல் களத்திற்கும் கோ2 க்கும் என்ன சம்பந்தம்?

  உலகிலேயே பிரிக்க முடியாதவை என்ன தெரியுமா? அரசியலும் மீடியாவும் தான். அரசியல் தளத்தில்தான் மீடியாவின் சக்தி கட்டியெழுப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனை பிபிசி நிருபர்...

Close