ஒரு ரஜினி ரசிகனின் கனவு!
ரஜினி ரசிகர்களின் கனவு இன்றைய தேதிக்கு என்னவாக இருக்கும்? கட்சிதான்… கொடிதான்… கோட்டைதான்!
மழையை துல்லியமாக சொல்லிவிடுகிற வெதர் மேன் மாதிரி, ரஜினியின் மனசை துல்லியமாக சொல்லிவிடக் கூடிய ஒரு ஹாட் மேன் கிடைத்தால் அவருக்கு சிலையே வைத்துவிடுவார்கள் இந்த ரசிகர்கள். இவர்களின் கனவெல்லாம் ரஜினியின் புதுக்கட்சி மீது இருக்க… அவரது பரம ரசிகரான டைரக்டர் செல்வாவுக்கு ரஜினி கெட்டப்பிலேயே ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் கனவு.
12-12-1950 என்ற படத்தை இயக்கி அவரே ரஜினி கெட்டப்பில் நடித்தும் வருகிறார். (கலவரம் வேண்டாம் தோழர்களே… இந்தப்படத்தில் அவர் ரஜினியாக அல்ல… ரஜினியின் ரசிகராக மட்டுமே நடித்திருக்கிறார்) சங்கர் சலீம் சைமன் காலத்திலிருந்து ரஜினி ரசிகராக இருக்கும் செல்வா, இந்தப்படத்தை எப்பவோ எடுத்திருக்க வேண்டியதாம். ஆனால் காலம் இப்போதுதான் கனிந்திருக்கிறது. தன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தையே மையமாக வைத்து இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார் செல்வா.
இந்த விஷயத்தை தனது படக்குழுவினருடன் நேரில் போய் ரஜினியிடமே சொல்லி ஆசியும் வாங்கி வந்திருக்கிறார். செல்வா என்ற தன் பெயரையே கபாலி செல்வா என்று மாற்றிக் கொண்டிருக்கிறார் என்றால், படத்தில் எவ்வளவு இன்வால்வ் ஆகியிருப்பார் என்பதை யோசித்துக் கொள்ள வேண்டியதுதான்.
கபாலி கெட்டப்பில், செல்வாவின் மேனரிசங்களையும் கூட்டிப் பார்த்தால், ஒரு டூப்ளிகேட் ரஜினி இன்டஸ்ட்ரியில் ரெடி! கபாலி 3 எடுக்கணும்னு ஆசை வைத்திருக்கும் ரஞ்சித்தின் டூப்ளிகேட்டுகள், செல்வாவையே ஜப்தி ரேட்டில் புக் பண்ணலாம்! (ஒரு ஐடியாதான்)
ரஜினியின் அறிவு தளம் மிகவும் உயர்ந்தது. தர்ம சிந்தனையிலும் அவர் உயர்ந்தவர். சாமான்ய தமிழ் மக்களுக்கு இது புரியாது. இப்போது அவரை திட்டி கொண்டு இருப்பார்கள். இருந்தாலும் அவர் தமிழக மக்களை கை விட்டு விட மாட்டார். பின்னாளில் இந்த நல்ல மனிதனை இப்படியெல்லாம் பேசி விட்டோமே என்று வருத்த படுவார்கள்.