கபாலி பிளைட்! மகிழ்ச்சி என்றார் ரஜினி!
நமது இணைய தளத்தில் சில வாரங்களுக்கு முன்பே குறிப்பிட்ட விஷயம்தான். இப்போது கண்கூடாக அரங்கேறியிருக்கிறது. ஜுன் 14 ந் தேதியே ‘சவுந்தர்யா வேணாம்னு சொன்னா வேணாம்தான்! இது அப்பா சென்ட்டிமென்ட்!’ என்ற தலைப்பில் நாம் எழுதிய செய்தியில் ரஜினி உருவத்துடன் ஸ்பெஷல் கபாலி பிளைட் வரப்போகிறது என்று கூறியிருந்தோம். இன்று காலையிலிருந்தே அந்த விமானத்தின் புகைப்படங்கள் இணைய உலகத்திலும், தமிழ் கூறும் நல்லுலகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. நாம் ஏற்கனவே வெளியிட்ட செய்தியின் லிங்க் https://wh1049815.ispot.cc/soundarya-not-like/
இந்த புகைப்படங்களை சூப்பர் ஸ்டார் ரஜினி பார்வைக்கு அனுப்பி வைத்தாராம் தயாரிப்பாளர் தாணு. இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே இப்படியொரு விஷயத்தை எந்த தயாரிப்பாளரும் செய்ததில்லை. எந்த நடிகருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிட்டவும் இல்லை. இந்த விமானப் புகைப்படங்களை பார்த்த ரஜினி, ‘மகிழ்ச்சி’ என்றாராம். அத்துடன், “எதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்?” என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது.
அவர் இவ்வாறு கூறினாலும், ரஜினியின் இருமகள்களும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்களாம். இப்படி பல விஷயங்களை ரஜினியின் குடும்பத்திற்கே சொல்லாமல் இன்ப அதிர்ச்சியூட்டி வருகிறார் தாணு. இந்த பிளைட் விஷயமும் அவரது மகள் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் ரகசியமாகதான் வைக்கப்பட்டிருந்ததாம். இப்போது இந்த புகைப்படங்கள் அவர்களுக்கு சர்ப்ரைஸ் இனிப்பு.
போகட்டும்… ரஜினியின் உருவச் சிலை பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? அதில் ஏழு அடி உயரமுள்ள பெரிய சிலைகள் மட்டும் இன்னமும் பிரிக்கப்படாமல் இருக்கிறது. டேபிளில் வைக்கக் கூடிய அளவில் செய்யப்பட்ட சிறு மெழுகு சிலைகள் மலேசியாவுக்கு ஏற்றுமதி ஆகிவிட்டது. அங்கு சில முக்கியஸ்தர்களின் டேபிளில் ரஜினி தத்ரூபமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்.
Kabali hot news , kabali images, kabali wallpapers , kabali release date more updates visit @ http://www.kabali.org.in
ஒலகத்துலையே யாருக்கும் இப்படி பண்ணினது இல்லைன்னு புருடா உடாதீங்க… ஜீஜு ஏர்லயன்ஸ் (கொரியா) தான் மொதல்ல ஹீரோக்களுக்கு விளம்பரம் பண்ணியது
Boss, ivanga ulaga arivu avlothaan