சுற்றுலாத்துறை தூதர்! ரஜினிக்கு புதுப் பொறுப்பு தர முடிவு?
உள்ளூர் அரசியலில்தான் உம்முன்னு இருக்கார். வெளியூர்ல விட்டா வெங்காயத்தை வெந்தயமாக்கி, அந்த வெந்தயத்தை வச்சு பந்தயமே நடத்திடுவாருப்பா… என்று அவரது ரசிகர்கள் நெஞ்சு வீங்குகிற அளவுக்கு சந்தோஷப்பட ஒரு மேட்டர் கிடைச்சாச்சு. வேறொன்றுமில்லை… மலேசியா அரசு அவருக்கு ஒரு முக்கியமான பதவியை தர முடிவு செய்திருக்கிறது. அதுதான் மலேசியா சுற்றுலாத்துறை தூதர் பதவி.
இது குறித்து மலேசிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை, சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மொகமட் நஸ்ரி அப்துல் அசிசும், ஜசெக கோத்தா மெலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தோங் ஹின்னும் விவாதித்தனர்.
“இதற்கு முன் மலாக்கா சுற்றுலாத்துறைத் தூதராக நியமனம் செய்யப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் ஷாருக் கான், இந்திய சுற்றுலாப் பயணிகளை மலேசியாவிற்குக் கொண்டு வரத் தவறிவிட்டதால், கபாலியில் நடித்த ரஜினிகாந்தை சுற்றுலாத்துறை தூதராக நியமிப்பதில் உங்களின் கருத்து என்ன?” என்று சிம் கேள்வி எழுப்பினார். “அவர் மிகவும் புகழ்பெற்றவர் மற்றும் ஷாருக் கான் அவ்வளவாக செயல்படவில்லை” என்றும் சிம் குறை கூறினார்.
அதற்குப் பதிலளித்த நஸ்ரி, “சுற்றுலாத்துறை தூதராக நியமனம் செய்ய நாம் அவரைத் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
இந்த பதவியை ரஜினி ஏற்பாரா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் இந்த பதவிக்கு மலேசிய அரசு வெயிட்டான மரியாதைகளை வழங்கும் போல தெரிகிறது. முக்கியமாக ஒரு தூதர் பதவி வாங்கினால், ஒரு டத்தோ பட்டம் இலவசம் என்பதும் முந்தைய நடைமுறையாக இருப்பதால், விரைவில் ரஜினி ‘டத்தோ ரஜினி’ என்றும் அழைக்கப்படலாம்.
https://youtu.be/btYCUY58CaQ
தலைவரின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்