ரஜினி கமல் அஜீத் விஜய் கூட்டு சேர்க்கிறார் விஷால்

கோபுரமாகவே இருந்தாலும் இடிஞ்ச பிறகு குவியல்தானே…! ஒரு காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடந்த இடம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வந்து அமர்ந்த இடம் என்றெல்லாம் பெருமை பொங்க ரசிகர்களால் மதிக்கப்பட்ட நடிகர் சங்க கட்டிடம், இன்று கொட்டிக்கிடக்கும் குவியலுக்கும் அடுத்த லெவலுக்கு போய், மாநாட்டு திடலாகி மைதானமும் ஆகிவிட்டது. ஆறு மாடியில் கட்டிடம் வருது என்றெல்லாம் பேசப்பட்ட நடிகர் சங்க கட்டிடத்தின் புது பில்டிங், இன்னும் அஸ்திவாரம் கூட தோண்டப்படாமல் கிடக்க, ஆனது ஆகட்டும்… அடுத்த வேலையை பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறது இள ரத்தங்கள்.

இந்த கட்டிடம் தொடர்பாக எழுந்த சின்ன சின்ன சர்ச்சைகள், வழக்குகள் எல்லாவற்றையும் வாபஸ் வாங்கிவிட வேண்டும். இன்னும் மூன்றே மாதங்களில் புது கட்டிடத்திற்கு பூஜை போடுகிறோம் என்று தீர்மானமாக கூறியிருக்கிறாராம் விஷால். ‘நான், ஆர்யா, கார்த்தி மூவரும் சேர்ந்து நடிக்கிறோம். எங்களோடு நடிக்க தமிழ்சினிமா ஹீரோக்கள் யாரும் முன்வரலாம். அந்த படத்தின் வியாபாரத்தில் வருகிற லாபத்தை அப்படியே நடிகர் சங்கம் கட்டுவதற்கு பயன்படுத்தலாம்’ என்று ஆலோசனை கூறியிருக்கிறாராம். ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் எல்லாரும் சேர்ந்து நடிக்கிற ஒரு படம் வேண்டும் என்று மக்கள் ஆசைப்பட்டார்களே… அதற்கான முதல் அகல் விளக்கை பற்ற வைத்திருக்கிறார் விஷால்.

சங்கம் வளர, தங்கம் கூட தர வேண்டாம். உங்கள் கால்ஷீட்டை ஒரு நாளோ, அரை நாளோ கொடுங்க. அது போதும் என்று இந்த முன்னணி ஹீரோக்களிடம் கேட்கப் போகிறார்களாம். அப்படியொரு படம் தயாரானால், அதுவேதான் தமிழ்சினிமாவின் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் கூடாரமாக இருக்கும்.

1 Comment
  1. பிம்பிடிக்கி பிளாப்பி says

    மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் வாய்க்கா தகறாரா!!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிங்கம், ஏழாம் அறிவை விட கலெக்ஷன் அதிகம்! லிங்குசாமியின் ‘அஞ்சான்’ விளக்கம்!

‘அஞ்சான்’ பத்திரிகையாளர் ஷோவுக்கு வந்திருந்தார்கள் சூர்யாவும் லிங்குசாமியும்! படம் வெளியான நேரத்திலிருந்தே அஞ்சான் பற்றி சமூக வலை தளங்களில் வந்த விமர்சனங்கள் எதிலும் அகிம்சை இல்லை. இவருக்கு...

Close