ரஜினியின் பேர் பாடி! ரசிக்குமா ஊர் கூடி?
தமிழ்சினிமாவில் முண்டா பனியனை அவிழ்த்துப் போடுகிற ஹீரோக்கள் யாரும் அதற்கு முன் ஜிம்முக்கு போகாமல் அந்த காரியத்தை செய்ததே இல்லை. ஆளவந்தானில் கமல், சூரியனில் சரத்குமார், அர்ஜுன் தன் எல்லா படங்களிலும்… இப்படி முட்டை பரோட்டாவை குவித்து வைத்தது போல உடம்பெங்கும் திணவு தசைகளால் மிரட்டி வந்த ஹீரோக்கள் கூட இப்போது செய்ய அஞ்சுகிற வேலையை துணிச்சலாக செய்திருக்கிறார் ரஜினி.
‘தர்பார்’ செகன்ட் லுக் நேற்று வெளியானது. அது வெளிவந்த கொஞ்ச நேரத்திலேயே மீம்ஸ் படைப்பாளிகள் ரஜினியின் பேர் பாடியை இஷ்டத்துக்கும் கமென்ட் அடித்து வருகிறார்கள். ‘யாருய்யா… பெரியவருன்னும் பார்க்காம அவர் கைய முறுக்கறது?’ என்றெல்லாம் ரஜினியின் தர்பார் லுக்கை கிண்டலடிக்கும் இவர்களை சொல்லி தப்பில்லை. இப்படியொரு காட்சியை எடுக்க அனுமதித்த ரஜினியைதான் சொல்ல வேண்டும்.
முதுமை என்பது எல்லாருக்கும் பொதுவானதுதான். அதை கிண்டல் செய்வது கொடுமையிலும் கொடுமை. அப்படியிருக்க, தானே ஒரு சந்தர்ப்பத்தை ஏன் அமைத்துக் கொடுத்தார் ரஜினி? இந்த காட்சியில் அவர் டி.ஷர்ட்டில் தோன்றினால் ரசிகர்கள் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிடுவார்களா என்ன?
அர்னால்டே அரை டவுசரோடு வந்தால் கூட, “தம்பி… உனக்கு அது செட் ஆவுல” என்று சொல்லிப்பழக்கப்பட்ட தேசம் இது.
இனியாவது உஷாராக இருக்க வேண்டும் அவர்.
[…] […]
போடா டேய் … தமிழக மக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மேல் வைத்த அன்பு பாசம் அளவிட முடியாதுடா .
சும்மா கிண்டல் பண்ணாதடா….
மனித புனிதர் ரஜினி அவர்கள் தாண்டா தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்
kaanchu pona karuvaadu maari irukaan. Murugadass super payanthagoliya vechau seinchitaan