பிகில் ஆடியோ லாஞ்ச்! என்ன பேசுவார் விஜய்?

செல்லுமிடமெல்லாம் பேசுவதற்கு அவரென்ன செல்லூர் ராஜுவா? விஜய்! காத்திருக்கும் கொக்கு போல காத்திருக்கிறாராம். இந்த முறை அவரது சொற்பொழிவுக்கு மேடை அமைத்துத் தரப்போகிற இடம் பிகில் ஆடியோ லாஞ்ச்!

வரும் 19 ந் தேதி சென்னை சாய்ராம் என்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெறப் போகிறது. சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் உம்முன்னு, கம்முன்னு என்றெல்லாம் பஞ்ச் டயலாக் பேசி ரசிகர்களை பரவசப்படுத்தினார் விஜய். அவரது பேச்சை கேட்டவர்கள், விஜய் இவ்வளவு கலகலப்பா பேசுவாரா? என்று கூட வியந்தார்கள். முன் கூட்டியே தயாரிக்கப்பட்ட பேச்சு என்றெல்லாம் கூறப்பட்டாலும், கிடைக்கிற மைக்கை உடைக்கிற ரகமல்ல என்பதை உலகத்திற்கு நிரூபித்தார் விஜய்.

தன் நண்பா நண்பிகளுடன் பேசுவதற்கு இன்னும் நிறைய வைத்திருக்கிறாராம் அவர். சென்ட்டிமென்ட்டாகவே இந்த சாய்ராம் கல்லூரியை தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய். மீடியாக்களை மட்டும் அழைத்து இந்த நிகழ்ச்சியை நடத்திவிடலாம் என்கிற முந்தைய யோசனையை மாற்ற சொல்லி கேட்டுக்கொண்டவரும் விஜய்தானாம். ரசிகர்களுக்கும் அனுமதி உண்டு.

ஆனால் ஒரே ஒரு சிக்கல். இதற்கு முந்தைய பட விழாக்கள் கல்லூரி விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமைகளில் நடந்தன. ஆனால் இந்த 19 ந் தேதி வியாழக்கிழமை. மாணவர் கூட்டம் என்ன பண்ண காத்திருக்கிறதோ? இதில் அஜீத் ரசிகர்களும் இருப்பார்கள் அல்லவா?

வண்ணத்துப்பூச்சியின் றெக்கையில வாட்டர் மார்க் போட்றாதீங்கப்பா!

Read previous post:
சிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்?

https://www.youtube.com/watch?v=HpsUOKzNgsg

Close