அபேஸ் ஆகும் ரஜினி பட தலைப்புகள்! இன்னொன்றும் போச்சு இப்போது?

யானைக்கு போர்த்துற அம்பாரித் துணியை பூனைக்கு போர்த்தினால் என்னாகும்? பூனைக்கும் மூச்சு முட்டும்! பார்க்கிறவர்களுக்கும் சிரிப்பு தாங்காது. ஆனால் இதையெல்லாம் புரியாத பூனைகள் ரஜினி, எம்ஜிஆர் மாதிரியான காலத்தால் வெல்ல முடியாத சூப்பர் ஸ்டார்களின் படத் தலைப்புகளை வாங்கி தன் படத்திற்கு வைத்துக் கொள்கிறார்கள். எம்ஜிஆர், ரஜினி என்று தேடுகிற போது கூகுளும், யு ட்யூபும் நிஜமான விபரத்தை சொல்ல முடியாமல் திணறி இந்த சின்னப் பையன்களின் விபரங்களை காட்டும் போது நிஜமான எம்.ஜி.ஆர் ரஜினி ரசிகர்களுக்கு மாரடைப்பு வந்தாலும் ஆச்சர்யமில்லை.

சமீபத்தில்தான் ரஜினியின் போக்கிரிராஜா என்ற தலைப்பு ஜீவா படத்திற்கு வைக்கப்பட்டது. அதற்கு முன் பொல்லாதவன், மாப்பிள்ளை என்று சகட்டு மேனிக்கு காலி பண்ணி வந்தார்கள் ரஜினி படத் தலைப்புகளை. மெல்ல மாசு பட்டு வரும் இந்த ‘தலைப்பு சுடல்’ கலாச்சாரத்திற்கு இன்னும் யாரும் ஆக்ஷன் எடுத்தபாடும் இல்லை. இந்த களேபரங்களுக்கு முடிவும் வரப்போவதில்லை. சரி… லேட்டஸ்ட் அட்ராசிட்டி என்ன?

ஜீவா தயாரிப்பில் ஆர்யா நடிக்கவிருக்கும் ஒரு படத்திற்கு ‘தனிக்காட்டு ராஜா’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்களாம். எதிர்கால சந்ததியினர் இனி கூகுளில் தனிக்காட்டு ராஜா என்று தட்டினால், ஆர்யா வந்து குளோஸ் அப்பில் நிற்பார். ஐயோ பாவம் ரஜினியும் அவர்தம் சாதனைகளும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புதுப்படம் எங்க எப்போ எத்தன ஷோ விபரம் உள்ளே – [19-02-16]

Close