ரஜினி, அஜீத், விஜய், தனுஷ் ஆப்சென்ட்! முன்னணி ஹீரோயின்களும் இல்லை! பொதுக்குழு அப்செட்!

சம்பள பாக்கி என்றால் மட்டும், “அதை எப்படியாவது வாங்கிக் கொடுங்க” என்று நடிகர் சங்கத்தின் கதவை தட்டும் ஹீரோயின்கள், நேற்று நடந்த பொதுக்குழுவுக்கு எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது எவ்வளவு அபத்தம்? நயன்தாராவில் ஆரம்பித்து, நண்டு சுண்டு ஹீரோயின்கள் வரைக்கும் ஒருவர் கூட அந்தப்பக்கம் வரவில்லை. சினிமாவில் வாய்ப்பிழந்த நடிகைகள் மட்டும் சிலர் வந்திருந்தார்கள்.

இவர்கள்தான் இப்படி என்றால், ரஜினி, அஜீத், விஜய், தனுஷ் ஆகியோரும் வரவில்லை. விஷாலின் உற்ற நண்பர்களான ஆர்யா உள்ளிட்ட சிலரும் அந்தர் தியானம் ஆகிவிட்டார்கள். தப்பித்தவறி வந்த சிலர் மட்டும் உள்ளே வந்து மினிட்ஸ் புத்தகத்தில் கையெழுத்தை போட்டுவிட்டு, போட்ட வேகத்தில் வெளியே ஓடினார்கள். எல்லாருக்கும் சொல்லப்பட்ட தகவல், “உள்ளே எந்த நேரத்திலும் கல் வந்து விழும். அவரவர் தலையை காப்பாற்றிக் கொள்வது அவரவர் பொறுப்பு” என்பதுதானாம். இந்த ஒரு காரணத்திற்காகவே அத்தனை பேரும் எடுத்தார்கள் ஓட்டம்.

நல்லவேளையாக ஸ்கைப் மூலம் தோன்றி பேசினார் கமல். “நடிகர் சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளும் நமது இடத்தில் நடைபெற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, அது நிறைவேறிவிட்டது. என்னைவிட வயதில் இளையவர்கள் மத்தியில் மிகுந்த நட்பும், பொறுப்பு உணர்வும் இருப்பதை உணர்கிறேன். இதில் மறைந்த கலைஞர்களின் பங்களிப்பும் நடிகர் சங்கத்தின் வளர்ச்சியில் உள்ளது. பேசவாய்ப்பளித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றியும்” என்று கூறிவிட்டு ஸ்கிரீன் ஆஃப் ஆனார்.

முக்கியமான ஆளுங்க வராமல் விட்டுட்டாங்களேப்பா… என்று கடைசியில் விஷால் கவலைப்பட்டது தனி சங்கதி.

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கல்வீச்சு… கண்ணாடி உடைப்பு… ரவுடிகளால் உறக்கமின்றி தவித்த நடிகர்கள்! விடிய விடிய திக் திக்

அநேகமாக தமிழ்சினிமாவின் எல்லா சங்கங்களும் ஏழைரையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் நடிகர் சங்கத்தில் நேற்று நடந்த அடிதடி, அநாகரீகத்தின் உச்சம்! கல்லெறிந்தது யார்? மண்டை உடைந்தது யாருக்கு?...

Close