பதவியால் நட்பே பகையானது! கருணாசை கதற விட்ட நடிகர்?

கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்… கருணாஸ் எம்.எல்.ஏ ஆகிவிட்டார். நல்ல நேரத்திலும் ஒரு கெட்ட நேரம்… அவரது முன்னாள் நண்பர்கள் பலர் எதிரியாகிவிட்டார்கள். அதுமட்டுமல்ல, சமயம் பார்த்து அவர் மண்டையை உடைக்கவும் கிளம்பிவிட்டார்கள். அப்படி என்னதான் பிரச்சனை? நேற்று கருணாசின் கார் உடைக்கப்பட்டதிலிருந்து இன்னும் அவரை குறி வைத்து சுற்றும் ஒரு கும்பல், ஒரு நடிகரின் உத்தரவை ஏற்றுதான் இவ்வாறு நடந்து கொள்கிறார்களாம். ஒரு காலத்தில் ஒன்றாகவே திரிந்த இவ்விரு நண்பர்களுக்குள் என்னதான் பிரச்சனை?

கருணாசுக்கு எம்.எல்.ஏ சீட் வாங்கிக் கொடுத்ததே அந்த நடிகர்தான் என்றார்களே… அது பொய்யா? கோடம்பாக்கத்தில் விசாரித்தால் கதை கதையாக கொட்டுகிறார்கள்.

நிஜத்தில் கருணாசுக்கு அதிமுக வில் எம்.எல்.ஏ சீட் கொடுக்கப்பட்டதற்கு காரணம் அந்த நடிகர் அல்லவாம். மாறாக கருணாஸ் வெற்றி பெறக்கூடாது என்று நினைத்து அவருக்கு எதிராக வேலை பார்த்தாராம். அது ஒரு கொடூரமான பிளாஷ்பேக்.

தனக்கு சீட் கிடைத்ததும் கருணாஸ் நம்பி நின்றது அவரைதான். எங்கிட்ட வெறும் எண்பது லட்சம்தான் இருக்கு. என்ன பண்ணுறதுன்னு தெரியல. மூணு கோடியாவது இருந்தால்தான் முடியும் என்று இவர் புலம்ப… உங்க அக்கவுன்ட் டீட்டெயில் கொடுங்க. நாளைக்கு காலையில் 2 கோடியை டிரான்ஸ்பர் பண்றேன் என்றாராம் நடிகர். அதற்கப்புறம் நடந்ததுதான் அதிர்ச்சி. அந்த எண்பது லட்சத்தை முதலில் கொடுங்க என்று வாங்கியவர், உடனடியாக தொகுதியிலிருக்கும் வட்டச் செயலாளர் வார்டு மெம்பரையெல்லாம் வரவழைத்து அந்த பணத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு, வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க என்று கூறிவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார்.

மறுநாள் அக்கவுன்ட்டுக்கு 2 கோடி வரும் என்று காத்திருந்த கருணாசுக்கு ஏமாற்றம். ஒரு பைசா வரவில்லை. போன் அடித்தாலும் சுவிட்ச் ஆஃப். இந்த நிலைமைதான் அடுத்தடுத்த இரண்டு நாளும். கையிலிருந்த 80 லட்சமும் காலி. கண்ணை கட்டி கும்மிருட்டில் விட்டது போல கதறிவிட்டார் கதறி. திட்டம் போட்டு நாம் குழியில் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்தவர், நேராக சென்னைக்கு வந்து தலைமையிடம் அழ… எப்படியோ அவர் பிரச்சனை சால்வ் ஆனது. அன்றிலிருந்தே இருவருக்கும் நட்பு டமால் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

நடிகர் சங்க பொதுக்குழு நடைபெறும் இந்த நேரத்தில், கருணாசையும் தாக்கிவிட வேண்டும் என்று துடிக்கிறாராம் அவர். பிரச்சனை இப்போது ஓயாது போலிருக்கே?

https://youtu.be/VgaJimlylfM

2 Comments
  1. Movie Buff says

    Who is the actor

    1. Roja says

      Jk rithesh

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி, அஜீத், விஜய், தனுஷ் ஆப்சென்ட்! முன்னணி ஹீரோயின்களும் இல்லை! பொதுக்குழு அப்செட்!

சம்பள பாக்கி என்றால் மட்டும், “அதை எப்படியாவது வாங்கிக் கொடுங்க” என்று நடிகர் சங்கத்தின் கதவை தட்டும் ஹீரோயின்கள், நேற்று நடந்த பொதுக்குழுவுக்கு எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது...

Close