அர்ஜுன் ரெட்டி ரீமேக்! தனுஷுக்கு ரஜினி செய்த அட்வைஸ் என்ன?
ஆந்திராவில் கோலாகல வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறது அர்ஜுன் ரெட்டி. நாலு கோடியில் எடுக்கப்பட்ட படம், அதைவிட பத்து மடங்கு லாபத்தை கொட்டிக் கொண்டிருக்கிறது. சற்று ஏடாகூடமான படமும் கூட. இதை அப்படியே தமிழில் லபக்குவதற்கு ஏராளமான போட்டிகள். ஒருவழியாக இந்த போட்டியில் வென்றவர் தனுஷ்.
பெரும் விலை கொடுத்து இந்தப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார் அவர். அவ்வளவு ஆசையாக வாங்கியவர், அதில் தானே நடிப்பது என்றும் முடிவெடுத்திருந்தார். ஆனால் அந்த ஆசையில் திடீர் திருப்பம்.
சூடம் எரியும்போது சூவ்வ்…வென்று ஊதிய மாதிரி, தனுஷின் ஆசையில் தன்னால் முடிந்த கட்டையை போட்டிருக்கிறார் ரஜினி.
இந்த அர்ஜுன் ரெட்டி படத்தை ரஜினியும் விரும்பி பார்த்திருக்கிறார். ஆனால் இதை தன் மருமகன் ஆசைப்பட்டு வாங்குவார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லையாம். அதற்கப்புறம் விஷயத்தை கேள்விப்பட்டவர் தனுஷை அழைத்து, “உங்களுக்குன்னு ஒரு நல்லபெயர் இருக்கு. நீங்க இந்தப்படத்தின் ரீமேக்ல நடிச்சு அதை கெடுத்துக்க வேணாம்” என்று அட்வைஸ் செய்தாராம்.
மாமனாரின் எண்ணத்தை மீறி மருமகன் என்ன செய்துவிடப் போகிறார்?
https://youtu.be/keZEGrxVzRs