சிவகார்த்திகேயனுக்கு ரஜினி போன்! பேசிய விபரம் என்ன?

சிவகார்த்திகேயனின் அழுகை தமிழ்சினிமாவில் பல விளைவுகளை ஏற்படுத்தினால் ஆச்சர்யம் இல்லை. ‘மிரட்றாங்கய்யா…’ என்று அஜீத் மாபெரும் சபையில் அப்போதைய முதல் கலைஞர் கருணாநிதி முன் பொங்கினாரே, கிட்டதட்ட அப்படியொரு விளைவை ஏற்படுத்தியிருக்கிறது அடந்த சம்பவம். மறுநாளே சிவகார்த்திகேயன் தலைப்புச் செய்தி ஆகிவிட, தமிழ்சினிமாவிலிருந்து முதல் ஆதரவு கரம் நீட்டிவிட்டார் சிம்பு. அதற்கப்புறம் சிவகார்த்திகேயனுக்கு வந்த போன் கால்களில் பல சினிமாவை தாண்டியும் பிரபல நிலையில் இருப்பவர்களிடமிருந்து… நடிகர் சங்கத் தலைவர் விஷாலும், சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கு. அவரை நடிகர் சங்கம் பாதுகாக்கும் என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில்தான் அந்த மின்னல்….

திடீரென ரஜினியிடமிருந்து போன் வந்ததாம் சிவகார்த்திகேயனுக்கு. எடுத்த எடுப்பிலேயே “இதையெல்லாம் இக்னோர் பண்ணுங்க சிவா…” என்றுதான் பேசவே ஆரம்பித்திருக்கிறார் ரஜினி. அதற்கப்புறம் ரஜினி பேசிய விபரங்கள் அனைத்தும் மிக மிக வாஞ்சையான வார்த்தைகள்.

“உங்களுக்கு எந்த நாடு பிடிக்கும்? அதை சொல்லுங்க” என்று கேட்டவர், “எந்த நினைப்பும் இல்லாமல் எல்லாத்தையும் தூக்கி இங்கேயே வச்சுட்டு குடும்பத்தோடு அந்த நாட்டுக்கு போங்க. பத்து நாள் கழிச்சி நீங்க திரும்பி வரும்போது எல்லாம் சரியாகியிருக்கும். அதுமட்டுமல்ல, குழந்தைகளும் குடும்பங்களும் விரும்புகிற இடத்தில் நீங்க இருக்கீங்க. மக்கள் ஒண்ணு நினைச்சிட்டா அதை யாராலும் தடுக்க முடியாது. சந்தோஷமா இருங்க. டென்ஷனை தலைக்கு ஏத்திக்க வேணாம்” என்றாராம்.

ரஜினியின் இந்த ஆறுதல் வார்த்தைகள் சிவகார்த்திகேயனுக்கு யானை பலத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை!

To listen Audio click below:-

 

1 Comment
  1. சன் கா says

    ஏண்டா வெண்ணை நீ தொலைபேசியை ஒட்டுக்கேட்டியா? நீ ஏதோ அங்க இருந்த மாதிரி எழுதுராய்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தாறுமாறான விமர்சனங்கள்! பிரசாந்த் மற்றும் ப்ளூ சட்டை மாறன் மீது வழக்கு!

பரமபத விளையாட்டில் பாம்பு வாயில் சிக்கிய பல்லி போலாகிவிட்டன தமிழ் படங்கள். அதுவும் படம் ஓடிக் கொண்டிருக்கு போதே, மொண்ணை... மொக்கை... என்று நாலு வரியில் டைப்...

Close