ரஜினி முருகன் 50 வது நாள்! ஆனால் விளம்பரப் பணம் இன்னும் வரலியே?

‘மொசக்குட்டியே… என்னை கசக்கிட்டியே…’ என்று வலியை பொறுத்துக் கொண்டு வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இணையதள நிர்வாகிகளும், விளம்பரக் கம்பெனி நடத்தி வருபவர்களும். எல்லாம் திருப்பதி பிரதர்சின் ‘ஸ்பெஷல் மொட்டை’யால் வந்த வேதனை!

‘ரஜினி முருகன்’ படத்திற்கு அநேக முன்னணி இணையதளங்கள், நாளிதழ்கள், மற்றும் தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் அளிக்கப்பட்டது. பெரும் பணச் சிக்கலுக்கு பிறகு வருகிற படம் என்பதால், ‘கொடுக்கறதை கொடுங்க’ என்று பலரும், ‘நல்லாயிருக்கட்டும் மக்கா’ என்று நினைத்த சிலரும் அவரவர் பங்குக்கு சகாய விலையில் விளம்பரங்களை வெளியிட்டார்கள். பொதுவாகவே சினிமா விளம்பரங்கள் வாங்குகிற நிறுவனங்கள், துட்டு கைக்கு வந்தாலொழிய ஸ்டாம்ப் சைசுக்கு கூட அவற்றை வெளியிட மாட்டார்கள். ஏனென்றால் சினிமா என்பது அந்தளவுக்கு நம்பிக்கையும் நாணயமும் விளைகிற புழுத்துப் போன பூமி.

கன்னத்தை செல்லமாக கிள்ளுகிறேன் பேர்வழி என்று சதையை அறுத்துக் கொண்டு போகிற நல்லவர்கள் திரியும் ஏரியா என்பதால், “முதல்ல துட்டு, அப்புறம்தான் நெக்ஸ்ட்டு” என்பார்கள். ஆனால் ரஜினி முருகன் விஷயத்தில் வந்துரும்ப்பா என்று நம்பி விளம்பரத்தை வெளியிட்ட எவருக்கும் இன்னும் பணம் வந்து சேரவில்லை. போன் மேல் போன் அடித்து ஓய்ந்து போனவர்கள் என்ன செய்யலாம் என்று மோட்டு வளையை பார்த்து சிந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் இந்த 50 வது நாள் விளம்பரம்!

வௌம்பரமெல்லாம் நல்லாதான் இருக்கு. நிஜ நிலவரம்தான் ரொம்ப மோசமா இருக்கு!

1 Comment
  1. Dandanakka says

    Ananthan you will get payment soon……

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இந்தாங்க ஸ்நாக்ஸ்… அளவுக்கு மீறி வளைந்த அருண் விஜய்?

தமிழ்சினிமாவை பற்றிய இண்டு இடுக்கு, அண்ட சராசரம் அத்தனையையும் டெக்னிகலாக அறிந்து வைத்திருப்பவர்கள் என்றால் அது பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்யும், இன்னொரு பழம்பெரும்...

Close