ரஜினி முருகனுக்கு யு! பிள்ளையார் பர்த் டேவுக்கு படம் தியேட்டரில்…

ரஜினி என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டதாலோ என்னவோ, அவர் படத்துக்கு வரும் அத்தனை சிக்கலும் ரஜினி முருகனுக்கும் வந்து நின்றது. இருந்தாலும் ‘சுற்றி நில்லாதே பகையே… துள்ளி வருகுது வேல்’ என்று சொல்லும்படியாக முதல் ஸ்டெப் வைக்கப்பட்டிருக்கிறது. யெஸ்… இந்த படத்தின் சென்சார் காட்சி இன்று நடந்தது. படத்தை பார்த்துவிட்டு வாயார பாராட்டிய சென்சார் அதிகாரிகள் ஒரு கட் கூட கொடுக்காமல், படத்திற்கு யு சர்டிபிகேட்டும் கொடுத்திருக்கிறார்கள்.

இதை தொடர்ந்து செப்டம்பர் 17 ந் தேதி வினாயகர் சதுர்த்தி தினத்தில் படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். யு கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற கவலை மற்றவர்களை விட, இந்த படக்குழுவினருக்கு சற்று அதிகமாகவே இருந்திருக்கக் கூடும். ஏனென்றால், சிவகார்த்திகேயனின் ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள், மற்றும் இளைஞர்கள். இதில் கடைசி கேட்டகிரியை விட்டுவிட்டால், மற்றதெல்லாம் ஏ வுக்கு அஞ்சுகிற கூட்டம். அந்த பெருங்கவலை இந்த யு வால் நீங்கியிருக்கிறது. அதற்கப்புறம் கலெக்ஷன் உச்ச ஹீரோ என்று புகழப்படும் சிவகார்த்திகேயன் படத்திற்கு வரிவிலக்கு வாங்கினால் பெருமளவு பண மிச்சத்தை பார்க்கலாம் தியேட்டர்காரர்கள். அதற்கும் அந்த யு பயன்படும்…

இப்படி மனம் கொள்ளாத சந்தோஷத்தோடு தணிக்கை காட்சி தியேட்டரை விட்டு கிளம்பிய ரஜினி முருகன் டீமுக்கு இனி வரும் காலங்களும் பிரகாசமாக இருந்து, அந்த பிரகாசம் தியேட்டர் வரைக்கும் வழி காட்டட்டும்!

1 Comment
  1. Rajesh says

    ALL THE BEST THALA – THALPATHI SIVAKAARTHIKEYAN.
    RAJINI MURUGAN MOVIE TO BE SUCCESSFUL.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மன்றம் இல்லேன்னா சரிபட்டு வராது! விழித்துக் கொண்ட விஜய் சேதுபதி

கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவதற்கு ரசிகர்கள் இல்லாத காலம்தான், ஹீரோக்களின் கெட் அவுட் காலம்! கெட்ட காலமும் கூட! தன்னை நோக்கி ஓடி வருகிற ரசிகர்களை, “போ......

Close