தமிழ் யாவாரம் இனி பலிக்காது! ரஜினி போட்ட நியூ ரூட்!

அரசியல்வாதிகளால் தமிழ் வாழ்ந்ததோ, இல்லையோ… தமிழால் அரசியல்வாதிகள் வாழ்ந்தார்கள். ‘தமிழன்டா..’ என்று நெஞ்சு நிமிர்த்தும் அத்தனை அரசியல்வாதிகளும் தங்கள் பிள்ளைகளை, ஆங்கில வழிக் கல்வியிலும், இந்தி மொழி புலமையிலும் மின்ன விடுவதுதான் யதார்த்தம். இந்த உண்மையை சற்று லேட்டாக புரிந்து கொண்ட இளைஞர்கள், வெற்று வார்த்தைகளுக்கோ, உணர்ச்சிமிகு உடுக்கை அடிக்கோ கொஞ்சம் கூட செவி சாய்ப்பதில்லை.

பிறமொழியை கற்றுக் கொள்கிற விஷயத்தில் இளைஞர்களுக்கு இருக்கிற ஆர்வத்தை லபக்கென கேட்ச் பிடித்திருக்கிறார் ரஜினி. நேற்று ஏ.சி.சண்முகம் தலைமையில் இயங்கி வரும் கல்வி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் சிலை திறக்க வந்த ரஜினி, இளைஞர்களின் பல்ஸ் பிடித்து இன்ப அதிர்ச்சி ஊட்டினார்.

‘ஆங்கிலம் நல்லா பேசப் பழகுங்க. அப்பதான் நல்லா படிச்சு வெளிநாட்ல வேலைக்கு போய் தமிழனின் பெருமையை நிலைநாட்ட முடியும்’ என்று மாணவர்களை அறிவுறுத்தினார்.

‘பிற மொழியை தவறாக பேசினால் ரசிப்பர். ஆனால் ஆங்கிலத்தை தவறாக பேசினால் கிண்டலடிப்பார்கள். மாணவர்களே… ஆங்கிலம் பேச, பேசதான் வரும். எனவே நண்பர்களோடு ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் தொழிலுக்கு உதவும். இது கம்ப்யூட்டர் உலகம். தமிழ் பேசினால் மட்டும தமிழ் வளராது. தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். நவீன உலகில் ஆங்கிலம் கற்று பிற மாநிலங்களுக்கு, நாடுகளுக்கு சென்று பெயர் வாங்கினால்தான் தமிழனுக்கு பெயர். சுந்தர் பிச்சையால் தமிழனுக்கு, தமிழுக்குப் பெயர். அப்துல் கலாமால் தமிழுக்கு பெயர். காரணம் ஆங்கிலப் புலமை இருந்தது. அதனால் ஆங்கிலம் பேசப் பழகிக் கொள்ளுங்கள்’ என்றார் ரஜினி.

இன்னமும் தமிழ் அம்மியில் மிளகாய் அரைத்து அதை வாகாக இளைஞர்களின் மூளையில் தடவி யாவாரம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு ரஜினியின் பேச்சு பேரதிர்ச்சியை வரவழைத்திருக்கும்.

அதன் பலனை இரண்டொரு நாளில் திட்டுகளாக வாங்கிக் குவிப்பார் ரஜினி. என்ன செய்வது? அதுதான் உலகம்!

1 Comment
 1. தமிழ் நேசன் says

  இளைஞர்கள் பட்டாளம் என்றும் எப்பவும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பின்னால் தான் உள்ளது. தமிழக மக்கள், இளைஞர்கள், மாணவிகள் என அனைத்து தரப்பினரும், தலைவர் ரஜினி அவர்கள் தான் தமிழகத்தில் முதல்வராக வர வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்கள் எண்ணம் விரைவில் நிறைவேறும்.
  தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும், தலைவர் ரஜினி அவர்களின் கள்ளம் கபடமில்லாத அதிரடி பேச்சுகளை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
  தமிழன் வளர்ந்தால்தால் தமிழ் வளரும். மிக மிக அருமையாக பேசி உள்ளார்.
  தமிழர் அல்லாதவர்களுக்கு, தலைவர் ரஜினி அவர்களின் பேச்சு புரிய வாய்ப்பு இல்லை. மொத்தத்தில் ஊழல் வாதிகளுக்கு சரியான சவுக்கடி.
  வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி
  தலைவர் ரஜினி அவர்கள், காமராஜர் போன்று சிறப்பான ஒரு நல்லாட்சியை தமிழக மக்களுக்கு வழங்குவார்.
  தலைவர் ரஜினி அவர்கள் தான், ஏகோபித்த தமிழக மக்களின் ஆதரவுடன், தமிழக முதல்வர் சிம்மாசனத்தில் அமர போகிறார்.
  தலைவர் ரஜினி அவர்களின் ஆட்சியில் தான் தமிழகம் முன்னேறும்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Pariyerum Perumal | Karuppi Music Video Feat. Santhosh Narayanan

https://www.youtube.com/watch?v=wdjgjSN9MIE

Close