ராஜ்கிரணின் புது முடிவு! கோடம்பாக்கம் அதிர்ச்சி!
தமிழ்சினிமாவில் ஆன்மீகம் பேசும் நடிகர்களில் ராஜ்கிரணுக்கும் ஒரு முக்கியமான இடம் உண்டு. ‘பணம் என்பது வெறும் காகிதம்’ என்று சொல்லும் அதே ஆன்மீகம், இவர்களுக்கு மட்டும் அதுபற்றி போதிக்கவேயில்லை போலிருக்கிறது. சரி… மேட்டருக்கு வருவோம்.
வருகிற படங்களில் எல்லாம் நடித்து, நம்மையும் சாகடித்து, அவரும் நோகிற ஆள் இல்லை ராஜ்கிரண். நல்ல கதைகளாக செலக்ட் பண்ணி, அதில் தனக்கும் சரியான ரோல் இருந்தால் மட்டும் சைன் பண்ணுகிற டைப். அந்த ஒரு விஷயத்துக்காகவே கோடம்பாக்கம் குனிந்து குனிந்து கும்பிடுகிறது அவரை.
ராஜ்கிரணின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று சண்டக்கோழி. இப்படத்தின் செகன்ட் பார்ட் எடுக்க முடிவு செய்த லிங்குசாமி, அதை ராஜ்கிரண் இல்லாமல் எப்படி எடுக்க முடியும்? நாம இல்லாம வண்டி நகராது என்று நினைத்தாரோ என்னவோ? ஒரு கிடுக்கிப்பிடி சம்பளத்தை கேட்டாராம் ராஜ்கிரண்.
அது குறித்துதான் வாய் பிளக்கிறது கோடம்பாக்கம். இரண்டரை கோடி சம்பளம். அத்துடன் படத்தின் பிசினசில் ஐம்பது சதவீத லாபம். இப்படி போகிறது ராஜ்கிரணின் பேராசை. லிங்குசாமி இதை ஆமோதித்துவிட்டால், இனி வரும் காலங்களிலும் இதையே சீலிங் ஆக்கிவிடுவார் நம்ம நல்லி விரும்பி!
லிங்கு என்ன முடிவெடுக்கப் போகிறாரோ?
https://youtu.be/780zcBd8SnY