ரோல் மாடல் ஆன பிரேம்ஜி பிரதர்ஸ்! பட விழாவில் பரிகாசம்!

சூர்யா கார்த்தி, சிம்பு குறளரசன், தனுஷ் செல்வராகவன், யுவன் கார்த்திக் ராஜா, என அண்ணன் தம்பிகளின் அன்பு பாச கூட்டணிக்கு குறிப்பிட்ட உதாரணங்கள் பலவுண்டு. அந்த வரிசையில் பிரேம்ஜி-வெங்கட்பிரபுவை விட்டுவிட்டு யோசிக்கவே முடியாது! இந்த ‘மாலை நேரத்து மப்பு பிரதர்ஸ்’ மற்றவர்களுக்கு ரோல் மாடல் ஆனது எப்படி என்பதை நினைத்தால் நமக்கு தலை சுற்றுமா, சுற்றாதா? ஆனால் வழக்கம் போல இதை டேக் இட் ஈஸியாக்கிவிட்டு போனார் வெங்கட்பிரபு.

இந்த அன்பு அண்ணன் அரங்கத்தை கலகலப்பாக்கிய இடம், ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா.

படத்தின் ஹீரோவான கயல் சந்திரனின் அண்ணன் ரகுநாதன் தம்பிக்காக தயாரித்த படம்தான் இது. இந்த விஷயத்தை சொல்ல வந்த எல்லாரும், ‘வெங்கட் பிரபு எப்படி தன் தம்பி பிரேம்ஜி மீது அன்பு வச்சுருக்காரோ… அப்படி’ என்று சொல்ல சொல்ல, முன் வரிசையில் இருந்த வெங்கட்பிரபுவுக்கு சிரிப்போ சிரிப்பு. மைக்கை பிடித்தவர், ‘எங்களை முன்னுதாரணமா வச்சுகிட்டு ஒரு அண்ணன் தம்பிங்க இருக்காங்கன்னா பெருமையா இருக்கு’ என்றார் நக்கலும் சிரிப்புமாக.

ஆனால் இந்த கேலி கிண்டலையெல்லாம் தாண்டி நின்றார்கள் இப்படத்தை தயாரித்த அண்ணன் தம்பிகள்.

அண்ணன் ரகுநாதன் எது பற்றி பேசினாலும் ‘இது தம்பிக்கு நல்லாயிருக்கு. இது தம்பிக்கு பிடிக்கும். இது தம்பிக்காக செஞ்சது’ என்றே பேசுவார் என்று அங்கு வந்திருந்த விஐபிகள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். தம்பியும் சளைத்தவரல்ல. அண்ணனின் அன்பை தன் பங்குக்கு அறிவித்துவிட்டுப் போனார்.

இந்த பாச பற்றுதல்கள் ஒருபக்கம் இருக்கட்டும். சுதர் இயக்கியிருக்கும் இப்படத்தின் மெயின் ஸ்டோரி என்ன தெரியுமா? கிரிக்கெட் உலக கோப்பையை ஒரு கும்பல் திருடுவதுதான்.

ட்ரென்டுக்கு ஏற்ற கதை. தெளிவா சொல்லியிருந்தால் ஹிட்டுதான்!

படத்தை தமிழகம் முழுக்க அக்ராஸ் பிலிம்ஸ் பிரபு வெங்கடாச்சலம் வெளியிடுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய் ஆன்ட்டனியை எச்சரித்த உதயநிதி

ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக...

Close