சபாஷ் நாயுடுவுக்கு செக் வைத்த பெரிய மனுஷன்! அடப்பாவமே… இப்படியா சோதனை வரும்?
‘சபாஷ் நாயுடு’ படத்தை துவங்கிய நாளில் இருந்தே, அமாவாசை வட்டத்தில் கருப்பு வாளியை கவிழ்த்து வைத்த மாதிரி விதவிதமான டிசைன்களில் வில்லங்கம் ஸ்டார்ட் ஆனது. டைரக்டருக்கு ஆக்சிடென்ட். வேறு வழியில்லாமல் படத்தை தானே இயக்க ஆரம்பித்தார் கமல். அதற்கப்புறம் அவருக்கே ஆக்சிடென்ட். கால் கட்டு போட்டுக் கொண்ட கமல், வருவேன். திரும்பி வருவேன்… என்று அழுத்தமான நம்பிக்கை கொடுத்து அதே அழுத்தம் குறையாமல் வெகு சில நாட்களுக்குள் நிவாரணம் பெற்றார்.
எல்லாம் சரி. பணம் இருக்கு. பார்த்து பார்த்து எழுதிய ஸ்கிரீன் ப்ளே வசனம் இருக்கு. நடிகர் நடிகைகள் படை இருக்கு. பரிவாரம் இருக்கு. ஆனால்? ஆனால்?
அங்குதான் மறுபடியும் ஒரு ட்விஸ்ட். இப்படத்தின் பாதி ஷுட்டிங்கை அமெரிக்காவில் முடித்துவிட்டார் கமல். மீதியையும் அதே லொக்கேஷனில் முடித்தாக வேண்டும். ஆனால் புதிதாக வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெளிநாட்டுக் காரர்கள் அமெரிக்காவுக்கு வந்து படம் எடுக்கிற விஷயத்திலும், கூட்டம் கூட்டமாக தம் நாட்டுக்குள் வந்து போகிற விஷயத்திலும் சில பல கட்டுப்பாடுகளை விதித்துவிட்டார்.
அதன் காரணமாக கமல் யூனிட்டுக்கு விசா கிடைப்பதில் கடும் சிக்கலாம். ட்ரம்ப் எப்போ ஜம்ப் ஆவறது? நாயுடு எப்போ உள்ளே என்ட்ரி ஆகுறது?
படத்துல வர்ற ட்விஸ்டை விட படு ட்விஸ்ட்டா கீதேப்பா இது?
https://youtu.be/-4llrVEOI0Q
கமல்ஹாசன் ஒரு பகட்டான முட்டாள். கூத்தாடி, குடிகாரன்