சரியான ஆளுக்குதான் குத்துவிட்டிருக்கிறார் சந்தானம்! கோடம்பாக்கம் பாராட்டு!
படத்தில் மட்டுமல்ல… நிஜத்திலும் பைட் போடுவோம்ல? என்று ஒரு ஹீரோவாக நிரூபித்த சந்தானத்தை, அவர் ஒரு லாயருக்கு குத்துவிட்ட நேரத்தில் யாரும் பாராட்டவில்லை. ஆனால் நேற்று மாலையிலிருந்தே அவரது போனில் ஒரே பாராட்டு மெசேஜ்களாம். ஏன்?
சந்தானத்திடம் குத்து வாங்கிய நபரின் லட்சணம் அப்படி. நேற்று எல்லா ஊடகங்களிலும் வெளியிடப்பட்ட அந்த நபரின் போட்டோவை பார்த்த சந்தானம் ரசிகர்களும், சினிமாக்காரர்களும் நீங்க மொத்துனது இந்தாளைத்தானே என்று கேட்க, கமுக்கமாக சிரித்தபடி யெஸ் என்றாராம் சந்தானம்.
இவர் ஏன் அவரை அடிக்கணும்? அவர் ஏன் இவர்ட்ட அடிவாங்கணும்? என்ற இன்றியமையாத இரண்டு கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும் என்றால், நீங்கள் ஆறு மாதத்திற்கு முன் வந்த செய்தித்தாள்களை லென்ஸ் வைத்து தேட வேண்டும். இருந்தாலும் ரத்தின சுருக்கமாக ஒரு முன்னோட்டம்.
சந்தானத்திற்கும் ஒரு பில்டருக்கும் இடையே இருந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த வக்கீல் தலையிட்டு வம்பு பண்ணினாராம். அவ்வளவுதான். தன் முழு பலத்தையும் சேர்த்து விட்டார் ஒரு குத்து. வழக்கறிஞரின் முகத்தில் நாலைந்து தையல் போடுகிற அளவுக்கு போய்விட்டது நிலைமை. அப்புறம்… முன் ஜாமீன் வாங்குகிற வரைக்கும் தலைமறைவானார் சந்தானம்.
பிளாஷ்பேக் முடிந்ததா?
கடந்த சில தினங்களுக்கு ஓடும் ரயிலில் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தர்ம அடி வாங்கியிருக்கிறார் இதே நபர். தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் இவர் ஒரு பா.ஜ.க பிரமுகராம்.
அதானே பார்த்தோம்! சட்டியில சேறு இருந்தால்தானே அகப்பையில அசிங்கம் வரும்?
Fake news,, understand ur ‘aaa ko’.. at-least spend couple of minutes before publishing news.. Otherwise u will loose reader base soon