முட்டு சந்தில் சிக்கிக் கொண்ட சந்தானம்! வாழ்க்கையை கெடுத்துட்டீங்களே சார்?

சந்தானம் திரையில் வந்தாலே, தியேட்டர் ஒருமுறை குலுங்கி அடங்கிய காலம் போயே போச்சா? ரசிகர்கள் ஆவலோடு சந்தானம் வரும் திசையையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வருவதென்னவோ, வாடிப்போன சதீஷும், வற்றிப்போன கருணாகரன்களுமாக இருக்கிறார்கள். சே… இதென்னடா தமிழனுக்கு வந்த சோதனை?

ஆனால் தானாக முன் வந்து சோதனையை எடுத்து சோப்பு போல பூசிக் கொண்ட சந்தானத்தையல்லவா சாடணும்? யெஸ்… இவர் நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கிற ‘சர்வர் சுந்தரம்’ வருமா, வராதா? நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டதாம். ஏன்? இந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கெனன்யா பிலிம்ஸ் தயாரித்த ஒரு நாள் கூத்து, புருஸ்லீ போன்ற படங்கள் அட்டர் பிளாப். சர்வர் சுந்தரம் படத்தின் வியாபார உரிமையை வைத்துதான் இந்த படங்களின் பிரச்சனையை சமாளித்திருக்கிறது அந்த நிறுவனம். இப்போது எல்லா கடனும் கூடி வந்து சர்வரின் தலையில் ஏறிக் கொள்ள…. அப்படத்தின் ஹீரோ சந்தானத்திற்குதான் விஷக் காய்ச்சல்.

இந்த ஒரு படம் போக மன்னவன் வந்தானடி, சக்கப் போடு போடுராஜா, ஓடி ஓடி உழைக்கணும் போன்ற படங்கள் அரைகுறையாக கிடக்கிறது. சர்வர் சுந்தரம் வந்து ரூட்டை கிளியர் செய்தால்தான் மற்ற படங்களுக்கு தெம்பு வரும். இதையெல்லாம் யோசித்து யோசித்து குழம்பிய சந்தானம், “என் வாழ்க்கையை நானே கெடுத்துகிட்டேனே” என்று புலம்பி வருகிறாராம்.

“எல்லா பிரச்சனையும் முடிஞ்சு என் படங்கள் திரைக்கு வரும்போது, சனங்க என்ன மறந்துருப்பாங்களாடா?” என்று தனது ஆபிஸ் பாயிடம் கேட்டால், அந்த பையன் ‘ஆமாண்ணே ஆமாம்’ என்கிறானாம்.

இருமலோ, தும்மலோ… என்னோட போகட்டும்னு அடக்கமா ஃபீல் பண்ணினா ஏன் அதிர்ச்சியான பதிலெல்லாம் வரப்போவுது?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தாத்தா பேரன் பாசத்தை சொல்லும் “நெடுநல்வாடை”

Close