சர்காரை ஓட வைக்க நிஜ சர்கார் கடும் முயற்சி!

‘இது சர்கார் வாரம்’ என்று நாடே அதில் மூழ்கிக் கிடக்கும் போலிருக்கிறது. ‘இத இத இததான் எதிர்பார்த்தேன்’ என்று படு குஷிக்கு ஆளாகியிருக்கிறது விநியோகஸ்தர் வட்டாரமும்! இந்த சந்தோஷத்திற்கு காரணம்… மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்!

‘அரை வேக்காட்டு இட்லி’ என்று சர்காரை பலர் விமர்சித்து வருவதாலும், ‘படம் படு குப்பை’ என்று எதிர் கோஷ்டிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருப்பதாலும் ‘சர்கார், திங்கட் கிழமையிலிருந்து சறுக்கிடுவார்’ என்ற மனக்கணக்கு விழுந்துவிட்டது மக்கள் மத்தியில். அந்த கணக்கைதான் நேர் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள். அதற்கு தோதாக படத்தில் ஒரு கேரக்டருக்கு கோமள வல்லி என்று பெயர் வைத்துவிட்டார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். விடுவார்களா? அம்மாவை இழிவு படுத்தியும், சர்கார் வழங்கிய இலவசங்களை கிண்டல் செய்தும் காட்சிகள் இருப்பதால் சர்கார் படக்குழு மீது சட்ட நடிவடிக்கை பாயும் என்று கூறியிருக்கிறார் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.

தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மீதும், அப்படத்தின் ஹீரோ விஜய் மீதும் வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்திருக்கிறார் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம்.

ஜெயக்குமார், அன்பழகன் போன்றோரும் விஜய்க்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். விஜய் திருந்தா விட்டால், திருத்தப்படுவார் என்று ஒரு விரல் எச்சரிக்கை வேறு. இவர்கள் இந்தளவுக்கு கோபப்படுகிற அளவுக்கு படத்தில் என்னதான் இருக்கிறது என்கிற ஆர்வம் ஜனங்களை தொற்றி முழுசாக 22 மணி நேரம் கூட ஆகவில்லை. தியேட்டர்களில் அதன் ரிசல்ட் தெரிவதாக கூறுகிறார்கள்.

விஜய்க்கு அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்தபின் சும்மாயிருக்குமா ஊடகங்கள்? நேற்று மட்டும் எல்லா தொலைக்காட்சிகளிலும் சர்கார் இஷ்யூதான்.

தமிழக பி.ஜே.பி புண்ணியத்தில் மெர்சல் கல்லா கட்டியது. தமிழக அமைச்சர்கள் புண்ணியத்தில் சர்காரும் சந்தோஷத்தின் எல்லையை தொடும் போல தோன்றுகிறது.

எது நடந்ததோ அது தப்பாக நடந்தாலும், எது நடக்கணுமோ, அது நன்றாக நடக்கிறது.

நடத்துங்க அமைச்சர்களே!

2 Comments
 1. Kokki Kumar says

  Very very cheap tactics from ARM, Vijay & Sun TV.. A film should run for its content, not for the controversy it creates.

  As its a DMK production, the name is Komalavalli and why not to name the villan as Stalin? Any guts to these directors? Not even a single theatre will be spared and all will be burnt and destroyed… This is the real status.

  People are watching all these cheap tactics group and will wipe them off soon…..

 2. Stalin Raj says

  சர்க்கார் படம் படுதோல்வி படமாக ரசிகர்கள் விஜய்க்கு அல்வா கொடுத்து விட்டார்கள்.
  வருமான வரி ஏய்ப்பு செய்த விஜய் நேர்மையானவன் அல்ல.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சர்கார் / விமர்சனம்

Close