விருதுநகர்ல முடியாது… ஆனா தென்காசில முடியுமாம்! தனுஷ் அண் கோ டகால்டி!

சொந்தப்படம் எடுக்கிறது அம்பானியா இருந்தாலும், அவரையும் கம்பால் அடித்துக் காயப்படுத்திவிடும் நஷ்டம். அப்படிதான் தனுஷ் தயாரித்த சில படங்களின் நிலைமை! அதுவும் ‘காலா’ படத்தின் மூலம் பெருத்த நஷ்டத்தை சந்தித்த தனுஷ், விநியோகஸ்தர்களுக்கு தரவேண்டிய நஷ்டத்தை கமுக்கமாக கரெக்ட் பண்ணி கொடுத்தார். அதற்கு ஒரே கைமாத்தாக உதவியவர் தாணு.

நன்றிக்கடனுக்கு நாலு படங்களில் சைன் பண்ணிய தனுஷ், வரிசையாக தன் கடமையை டிக் அடித்துக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்றுதான் அசுரன். 18 நாட்களே எடுக்கப்பட்ட படப்பிடிப்பு இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக விருதுநகர் பகுதியில் முகாமிட்டிருந்தது அசுரன் குழு. எலக்ஷன் நேரம். பணப்போக்குவரத்து சீரா இருக்காது என்று கூறி படப்பிடிப்பை நிறுத்தியதாக கூறுகிறார்கள். ஆனால்,

என்னய்யா ஆனால்?

அதே தேதிகளை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் துரை செந்தில்குமார் படத்திற்காக கொடுத்தார் தனுஷ். டபுள் வேட தனுஷுக்கு, ஒரு வேட ஜோடி சினேகா என்பது கூடுதல் குளிர்ச்சி. குற்றாலம் தென்காசி பகுதிகளில் நடைபெற்று வந்த ஷுட்டிங்கில் தனுஷ் கலந்து கொண்டார்.

விருதுநகர்னா வந்து சோதனையிடும் தேர்தல் ஆணையம், தென்காசி குற்றாலத்துக்கு வராதுன்னா…

அதெப்படிங்க அண்ணாச்சி?

Read previous post:
#NatpeThunaiReview #NatpeThunai #ValaiPechu Natpe Thunai | நட்பே துணை | படம் எப்படி இருக்கு பாஸ்?

https://www.youtube.com/watch?v=PSMUpJ5NXR0

Close