சிம்புவை ஏன்யா உசுப்பி விடுறீங்க?

தானும் திருந்தி தன் சொசைட்டியையும் திருத்தணும்னு நினைக்கிற ஒருவரை, அவரையும் குழப்பி, அவர் சார்ந்த தொழிலையும் குழப்பிய புண்ணியவான் எவனோ? அவனுக்கு ஆயிரம் அன் லைக்ஸ் போய் குவியட்டும்…

விஷயம் இதுதான். நேற்றிரவு சிம்பு வெளியிட்ட வீடியோ ஒன்றில் அநியாயத்துக்கு சுனாமி! நான் யார்னு என் ரசிகர்களை விட்டு காட்றேன் என்கிற டோன் அதில் மித மிஞ்சி வழிந்தது. வந்தா ராஜாவாதான் வருவேன் பட ரிலீஸ் தினத்தன்று என்ன நடக்க போகிறதோ?

சில தினங்களுக்கு முன் ஒரு வீடியோவை வெளியிட்டார் சிம்பு. அதில், என் ரசிகர்கள் யாரும் இந்த ஒரு படத்திற்கு மட்டும் கட் அவுட் வைக்க வேண்டாம். அந்த காசுல அவங்கவங்க அப்பாவுக்கு வேஷ்டியோ, அம்மாவுக்கு புடவையோ, தங்கை தம்பிகளுக்கு ஒரு சாக்லெட்டோ வாங்கிக் கொடுங்க. அதை வீடியோவா எடுத்து வெளியிட்டா எனக்கு சந்தோஷம் என்று கூறியிருந்தார். நல்லாதானே இருக்கு இந்த டீல் என்று அவரது ரசிகர்களும், சிம்புவை வெறுக்கும் சிலரும் கூட வாழ்த்தினார்கள்.

இந்த சந்தோஷத்தில்தான் சங்கு ஊதிவிட்டார்கள் யாரோ? சிம்புவுக்கு ஏதுய்யா பேன்ஸ்? இருந்தால்தானே கட் அவுட் வைக்க? என்றெல்லாம் விமர்சனம் செய்தார்களாம். அது எப்படியோ காடு மலையெல்லாம் கடந்து சிம்புவின் காதில் விழுந்துவிட்டது. என்னை பார்த்தா அப்படி சொன்னே? இரு காட்றேன் என்று புதிய வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இதில், முந்தைய வீடியோவுக்கு நேர் எதிரான கருத்துக்களை கொட்டிவிட்டார்.

அப்படி சொன்னவங்க மூக்கை உடைக்கிற விதத்தில், இதுவரை வைக்காத அளவுக்கு கட் அவுட் வைங்க. குடம் குடமா பால் ஊற்றுங்க என்று கூறியிருக்கிறார்.

இந்த செலவுக்கெல்லாம் பணம் தராத எந்த அப்பன் முகத்துல மண்ணெண்ணை ஊற்றி கொளுத்திவிடப் போறாய்ங்களோ? நினைச்சாலே பகீர்ங்குது!

Read previous post:
அஜீத்தை வெளியே வரவழைத்த தமிழிசை! யக்கோவ்… நன்றி நன்றி!

Close