சிவகார்த்திகேயன் அழுகை! ஆறுதல் சொன்ன சிம்பு!

சினிமாவில் நசுக்கப்படுகிற ஹீரோக்களுக்கு பகிரங்கமாக ஆறுதல் சொல்லவோ, ஆதரவு காட்டவோ கூட முக்காடு போட்டுக் கொண்டு அர்த்த ராத்திரியில் வரும் சக ஹீரோக்களுக்கு மத்தியில், “கவலைப்படாதீங்க சிவா” என்று பட்டவர்த்தனமாக பளிச்சென்று பேச சிம்புவால் மட்டுமே முடியும்! அதற்காகவே “இந்தா பிடியுங்க சிம்பு ஒரு லாரி பாராட்டுகளை…”

‘ரெமோ’ படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில், மனதில் அடக்கி வைத்திருந்த வேதனையையெல்லாம் வினாடிக்கு பத்தாயிரம் கன அடி வீதம் திறந்துவிட்டார் சிவகார்த்திகேயன். ஒரு கட்டத்தில் மனம் விட்டு அவர் கண்ணீர் சிந்த… ‘அடடா’வானது மொத்த பிரஸ்சும். “எங்களை வேலை செய்ய விடுங்க” என்று கடைசியாக அவர் கேட்டுக் கொண்டு தன் உரையை முடித்தாலும், அவரை அழ வைத்த சக்தி எது? என்கிற கேள்வி அதற்கப்புறம் கிளம்பிவிட்டது. இவரா இருக்குமோ, அவரா இருக்குமோ என்று ஆளாளுக்கு கொளுத்திப் போட யாரோ சிந்திய கண்ணீருக்கு, எவர் வீட்டிலோ சாபம் விழுந்தது. (நிஜத்தில் சிவகார்த்திகேயனுக்கு எதிராக சிலரை தூண்டிவிட்டது அந்த பலே ஹீரோதான் என்கிறது ரகசிய தகவல்கள்)

இந்த நேரத்தில்தான் தன் ஆதரவு கரத்தை சிவகார்த்தியேனுக்காக நீட்டியிருக்கிறார் சிம்பு. தனது ட்விட்டர் பக்கத்தில் Don’t worry shiva .Not only u ,even i know who they r and thats what they r good at .Hard work is all that matters . Leave the rest to god. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் அவர். அதற்கப்புறம் சிவகார்த்திகேயனின் தொலைபேசியிலும் அவர் நேரடியாக பேசியதாக தகவல்.

பிரச்சனைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அது தனி பஞ்சாயத்துக்குரிய விஷயம். பட்…. திடீர் டிராபிக் ராமசாமியாக மாறி, ஹீரோக்களின் உரிமைக்கு குரல் கொடுத்த சிம்பு பாராட்டுக்குரியவர்தான்!

To listen audio click below:-

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா ஹேப்பி அண்ணாச்சி

Close