14 வருடங்கள் கழித்து மீண்டும் ஜோதிகா! சிம்பு ரசிகர்கள் பரவசம்!

கடவுள் அமைத்து வைத்த மேடையில் கண்டதெல்லாம் பளபளதான்! ஆனாலும் அந்த பொல்லாத கடவுள் ஸ்பெஷலாக சில மின்னல்களை உருவாக்குவான். அப்படியொரு மின்னல்தான் ஜோதிகா என்றால், ஷுட்டிங்கை பிரேக் விட்டுவிட்டாவது ஓடி வந்து ‘ஆமாம்’ என்பார் சூர்யா.

ஜோதிகாவின் திரையுலக பயணத்தில், அவர் நடித்த எல்லா படங்களுமே ஆஹா ஓஹோதான் என்றாலும், ரசிகர்களால் மறக்க முடியாத படங்கள் சிலவும் உண்டு. அதில் முக்கியமான படம் மன்மதன்! 2004 திரைக்கு வந்த மன்மதன் பெற்ற வெற்றி, சிம்புவின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தியதையும் மறுப்பதற்கில்லை.

அதற்கப்புறம் கால ஓட்டத்தில், மிஸ் ஜோதிகா மிசஸ் ஜோதிகா ஆகிவிட்டார். அவரை மீண்டும் சினிமாவுக்கு கொண்டு வந்த அத்தனை பேரும் புண்ணியவான்கள் ஆகிவிட்டார்கள். தற்போது அந்த பெருமையை தட்டிக் கொண்டு போயிருக்கிறார்கள் இயக்குனர் ராதாமோகனும் தயாரிப்பாளர் தனஞ்செயனும். காற்றின் மொழி படத்தில் ரேடியோ ஜாக்கியாக வருகிறார் ஜோதிகா. மொழி படத்தில் வாய் பேச முடியாத ஜோதிகா, எப்படி காற்றின் மொழி படத்தில் வளவளவென பேசும் பட்டாம்பூச்சியானார்?

அதை படம்தான் சொல்ல வேண்டும். ஆனால் 14 ஆண்டுகள் கழித்து மன்மதன் ஜோடி மறுபடியும் ரிப்பீட். ஆனால் படு டீசன்ட்டாக. யெஸ்… ரேடியோ ஜாக்கியான ஜோதிகா, நடிகர் சிம்புவை இன்டர்வியூ செய்வது போல காட்சி. அந்த காட்சியில் டப்பிங் பேசுவதற்காக வந்திருந்தார் நாக் ஸ்டூடியோவுக்கு வந்திருந்தார் சிம்பு.

அவரை நாக் ஸ்டுடியோஸ் கல்யாணம், இயக்குனர் ராதாமோகன் ஆகியோர் வரவேற்றார்கள். அப்புறம்? ஒரே மூச்சில் டப்பிங் பேசிக் கொடுத்துவிட்டு கிளம்பினார் சிம்பு.

Read previous post:
இந்த பாரதிராஜாவுக்கு என்னாச்சு? இப்படி கன்பீஸ்(?) ஆகிட்டாரே?

Close