விஷாலுக்கு சிம்பு பாராட்டு!

அதென்னவோ தெரியவில்லை, விஷாலுக்கும் சிம்புவுக்கும் ஜென்ம பகை. நடிகர் சங்கத் தேர்தல் நேரத்தில் பட்டாசாக பொரிந்த சிம்புவை, பதம் பார்க்கும் நேரத்திற்காக காத்திருந்தார் விஷால். பீப் பாடல் பிரச்சனையிலிருந்து, அஅஅ பட பிரச்சனை வரைக்கும் விஷால் அமுக்கமாக இருந்து ஆட்டி பார்த்ததாக கடுப்பாகிறது சிம்பு வட்டாரம். நடுவில் சிம்புவுக்கு ரெட் போடப்படுவதாக வந்த சர்ச்சைக்குப் பின்னாலும் விஷால் இருப்பதாக சந்தேகப்பட்டார் சிம்பு.

எதிரிக்கும் நியாயம் இருக்கும் என்பதை இப்போதெல்லாம் உணர்ந்து பேசுகிற அளவுக்கு ‘வைட் ஆங்கிள்’ சிந்தனைக்கு வந்துவிட்ட சிம்பு, இப்போது விஷாலை மனம் திறந்து பாராட்டியதாக சொல்லப்படுவதில் வியப்பு இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் சிம்பு அப்படிதான். நல்லதை பாராட்டுவதும், அல்லதை விமர்சிப்பதும் அவரது ரத்தத்திலிருக்கும் ‘ஹீரோ’குளோபின் செய்கிற வேலை.

ரிலீசை நிறுத்துவதில் ஒரு அர்த்தம் இருக்கு. ஆனால் ஷுட்டிங்குகளையும் நிறுத்தணும் என்ற முடிவுக்கு தனது நண்பர்கள் மூலம் விளக்கம் கேட்டு பெற்றாராம் சிம்பு. ஷுட்டிங் மற்றும் பின் தயாரிப்பு வேலைகளுக்கு தடை போடாவிட்டால், இப்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிற படங்களுடன் அதுவும் போட்டிக்கு வந்து நிற்கும். அப்போது முதலில் முடிந்த படங்களுக்குதான் பாதிப்பு வரும். எனவே தொலை நோக்கு எண்ணத்துடன் இப்படியொரு முடிவெடுத்ததாக அவருக்கு சொல்லப்பட்டதாம்.

அப்படின்னா சரி. இந்த தொலைநோக்கு சிந்தனைக்காக விஷாலை பாராட்டணும் என்று கூறியிருக்கிறார் சிம்பு. இன்டஸ்ட்ரியில் பரவி வரும் இந்த தகவல், சிம்புவின் நடுநிலை மனநிலையை வெளிப்படுத்துவதால், பலருக்கும் வியப்பு. ப்ளஸ் அதிர்ச்சி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கடைசியில இப்படி கேட்டுட்டாரே அவரு?

https://www.youtube.com/watch?v=zPSlBHgMj2g

Close