சிம்பு பக்கமும் கொஞ்சம் நியாயம் இருக்கும் போல தெரியுதே?

சிம்புவின் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படம் தொடர்பான நஷ்ட கணக்கு வழக்குகளை அடுத்து, அவரை பஞ்சாயத்துக்கு அழைக்கிறது தயாரிப்பாளர் சங்கம். ஆனால் இவருக்காக பேச வேண்டிய நடிகர் சங்கம் வாயை மூடி வேடிக்கை பார்க்கிறது. இந்த நிலையில் சிம்பு நடித்து வரும் சுந்தர்சி படப்பிடிப்பை நிறுத்தவும் துடித்து வருகிறார்கள். கிடுக்கிப்பிடி இறுகிய பின்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் வந்தாராம் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர். உள்ளே வரும்போதே ‘உங்க செல்போனை ஆஃப் பண்ணிட்டு வாங்க’ என்றும் கேட்டுக் கொண்டார்களாம். இதென்னடா அராஜகமா இருக்கு என்று கொதித்துப் போயிருக்கிறது சிம்பு வட்டாரம்!

அதே நேரத்தில் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்வதற்காக ஒரு வாரம் டைம் கேட்டிருக்கிறாராம் உஷா. அப்போது என்ன சொல்வார்கள்? விசாரித்தால், இந்தப்பக்கமும் நியாயம் இருக்கும் போலதான் தெரிகிறது.

‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்திற்கு முன்பு வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை 27 கோடி ரூபாய்க்கு தமிழ்நாடு திரையரங்க உரிமைக்காக விற்றிருக்கிறார்கள். அப்படியென்றால் அடுத்து வந்த ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை ஏன் 18 கோடிக்கு, அதுவும் பாழாய் போன வியாபார முறையான டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் கொடுக்க வேண்டும்?

அஅஅ படம் வெளியாவதற்கு முன்பே தனக்கு மூன்றரை கோடி சம்பள பாக்கி இருப்பதாக சிம்பு நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தாரே, ஏன் அதைப்பற்றி விசாரித்து பணத்தை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனிடமிருந்து பெற்றுத்தரவில்லை. அப்போது தன் புகாரை பற்றி கண்டுகொள்ளாத சங்கத்திற்கு சிம்பு ஏன் இப்போது பதில் சொல்ல வேண்டும்?

சிம்பு மொத்தமே 27 நாட்கள்தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றால், ஏன் இவ்வளவு பெரிய பட்ஜெட் படம் என்று பொய் சொல்ல வேண்டும்?

இப்படி அடுக்கடுக்காக கேள்வி கேட்கப் போகிறார்களாம்.

வரவர யாரு பக்கம் நியாயம் இருக்குன்னே புரிய மாட்டேங்குதே?

2 Comments
 1. Kannan says

  Simbu shootingkku varatha naal cancel aana 40 days. Shooting cost actress cost +++.
  Simbu may have changed but what he has done with AAA mivie very wrong. Should help that producer.
  Simbu yalra group , producer council opposite group, vishal hates will support Simbu
  Neenga remba yalra ippo simbu kku. Ean unga friend suresh kamatchi productionla act pannurathalaara.??
  One day truth will come out

 2. மீரான் says

  சிம்பு ஒரு தொடர் தோல்வி நாயகன். அவன் ஒரு அயோக்கியன்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ராதிகா மேம்… கொஞ்சம் இந்தப் பக்கமும் பாருங்க!

Close