ஓட்டுப் போடாத சிம்ரனுக்கு உதவிக்கு வருமா நடிகர் சங்கம்?
தமிழ்நாட்டையே பரபரப்பாக்கிய நடிகர் சங்கத் தேர்தலை, ஜஸ்ட் லைக் தட் “வேலையிருக்கு” என்று சொல்லி ஓட்டு போடாமல் ஒதுக்கிவிட்டவர் சிம்ரன். இத்தனைக்கும் தேர்தலுக்கு முதல் நாள் வரைக்கும் சென்னையில்தான் இருந்தாராம் அவர். ஓட்டுக் கேட்ட பாண்டவர் அணி, மறக்காமல் சிம்ரனையும் நேரில் சந்தித்து, மறந்திராதீங்க என்றெல்லாம் கேட்டுக் கொண்டது. ஆனால் இரு அணிகளுக்கும் பெப்பே காட்டிவிட்டு மும்பைக்கு ஓடிவிட்டார் சிம்ரன்.
ஒருவகையில் இந்த எஸ்கேப்பிசம் சேஃப்டிதான் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் திரும்ப இவர்கள் வரக்கூடாதில்லையா? சென்னை ஈசிஆர் சாலையில் அவர் திறந்திருக்கும் புதிய ரெஸ்ட்டாரென்ட் திறப்பு விழாவுக்கு நடிகர் சங்க தலைவர் நாசரை அழைத்தாராம். வர்றேம்மா… அவசியம் வர்றேன் என்றவர், அப்படியே சும்மாயிருந்துவிட்டார். அவர் ஏன் வரலில்லை என்பதை நன்றாக புரிந்து கொண்ட சிம்ரனும் அமைதியாகிவிட்டார்.
ஆனால் பாழும் மனசு கேட்குதா? “ஒழுங்கா ஓட்டுப் போட்டிருந்தா நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட கேட்டரிங் ஆர்டரையாவது கேட்டு வாங்கலாம். இப்ப அதுக்கும் வழியில்லையே?” என்று அங்கலாய்கிறாராம் தோழிகளிடம். ஏன் பிசினசில் ஓட்டை விழுந்திருச்சா? யெஸ்… ஓட்டலுக்கு ஓசியில் சாப்பிடுவதற்கு காக்கா குருவி கூட வர்றதில்லையாம். அதனால்தான் இந்த அடுத்த லெவல் ஐடியா!