சிவா மனசுல கப்ஸா! இப்படி சொல்லி தப்பிச்சுருவாங்க!
அந்த உண்மை சம்பவத்தை இப்ப நினைச்சாலும் இஞ்சி மரபாவை கரைச்சு குடிச்ச எபெக்ட் வரும். ஒரு பாராளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சியை சேர்ந்த இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரும் அந்நியோன்யமாக இருக்கிற ஸ்டில்லும், அதை தொடர்ந்த விமான நிலைய அடிதடியும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து போகக் கூடியது அல்ல.
நிஜங்களை படமாக்குகிற போது இருக்கிற நெருக்கடி இயக்குனரும் நடிகருமான வாராகிக்கு இருக்கிறதா இல்லையா என்கிற டவுட் ஒரு சினிமா போஸ்டரை பார்க்கிற போதெல்லாம் வரும். அந்தப்படம், ‘சிவா மனசுல புஷ்பா’. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடந்தது. இயக்குனர் எஸ்.ஏ.சி. ஜே.கே.ரித்தீஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, எஸ்.வி.சேகர், பிரபல ஆன்மீகவாதி அசோக்ஜி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இதுபோன்ற மேடைகள் படம் சம்பந்தப்பட்ட செய்திகளை பேசுவதைவிட, ஊர் பஞ்சாயத்தை கூட்டி நார் நாராக கிழிப்பதற்கு பயன்படும் அல்லவா? இந்த நிகழ்விலும் விஷாலை போட்டு பொளந்து கட்டிவிட்டார்கள். அதிலும் விஷால் ஒரு கோடி லஞ்சம் கேட்டதாக அவரது நண்பர்களே பேரம் பேசும் ஒரு ரகசிய வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் படத்தின் ஹீரோவும் இயக்குனருமான வாராகி.
‘நடிகர் சங்கத்தை விட்டு விஷால் விரைவில் விரட்டியடிக்கப்படுவார்’ என்று ஜே.கே.ரித்தீஷ் சவால் விட, ‘தமிழ்நாட்டை விட்டே விரட்டுவேன்’ என்று சவால் விட்டார் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி. இந்த விரட்டுதல்(?) கூட்டத்தில் தானாக வந்து இணைந்து கொள்வார் போலிருக்கிறது அந்த அரசியல்வாதி. ஏன்?
படத்தில் ஒரு ஏர்போர்ட் சீன் வருகிறதாம். ஒரு பெண் எம்.பி. ஒரு ஆண் எம்.பியை அறைவது போல ஒரு காட்சியை அதில் வைத்திருக்கிறார்களாம். இப்படி பட்டவர்த்தனமாக துண்டை உருவுறாங்களே என்கிற கோபம் அவருக்கு வருமல்லவா?
ஒருவேளை இந்த படத்திற்கு அவர் மூலம் ஏதாவது தொந்தரவு வந்தால், ‘சிவா மனசுல புஷ்பா இல்லண்ணே… சிவா மனசுல கப்ஸா’ன்னு கதை விட்டு தப்பிப்பாங்களோ?
சிவா… சிவா…!
ரித்தீஷ் அண்ணனை முதல் முதல்ல பார்க்கும்போது இரண்டு பக்கமும் மூட்டையில பணம் வெச்சிட்டு உட்கார்ந்திருந்தார். ரொம்ப நல்லவர். சுரேஷ் காமாட்சி ??????
Jk rithesh – alagiri, ttv kollai addichu
Suresh kamatchikkum rithesh than sponser pola.
Athu sari anbuchelizan nallavar endru sonna aal thane.
Ritheshkku building katta contract koduththu iruntha vishalai kadavul rangekku pukaluvar
Suresh kamatchi kku vishal vishal vishal
Vishal paithiyam varum athukku
Ennappa Annan cheran? Avar nalla iyakkunam intha mathiri aatkalal than kettar
Sv sekar- seeman oru kudikaran
Suresh kamatchi seeman supporter
Jk rithesh- mosadi mannan
Intha moonum senthu vishalai ethikku endra, unmaiyave vishal periya aal than.
Jk ritheshtta Kalla panam irukku RKnagar election mathiri vetti pera mudiyum.
RIPTAMILCINEMA