சிவகார்த்தியேனுடன் போட்டி! தரைமட்டமாக கெஞ்சும் சந்தானம்?

சுமார் நாற்பது நாட்களுக்கு முன்பே தனது ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டார் ‘வேலைக்காரன்’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. திடீரென குறுக்கே புகுந்தார் சந்தானம். தனது ‘சக்கப்போடு போடு ராஜா’ படத்தையும் அதே நாளில் வெளியிடுவதாக அறிவித்தார். சிவகார்த்திகேயனை பிடிக்காத ஒரு கூட்டம் இவருக்கு பின்னால் இயங்கிக் கொண்டிருக்க, உரலுக்குள் தலையை விட்ட மாதிரி அவஸ்தைக்கு ஆளாகியிருக்கிறாராம் மிஸ்டர் சாண்டல். ஏன்?

தொடர் ஹிட்டுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் சிவாவுடன் மோதினால், சந்தானத்தின் முனை மூக்கில் குத்துவிடாமல் என்ன செய்வார்கள் தியேட்டர்காரர்கள்? அதுதான் நடந்திருக்கிறது. வேலைக்காரனுக்கு பெரும்பாலான மால் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுவிட, அடுத்தடுத்து தோல்விகளை கொடுத்து வரும் சந்தானத்தின் படத்திற்கு டப்பா தியேட்டர்கள்தான் கிடைக்கிறதாம்.

அதுமட்டுமல்ல… “ஒரு பைசா அட்வான்ஸ் தர மாட்டோம். படத்தை போட்டுக்கோங்க. கலெக்ஷன் என்ன வருதோ பிரிச்சுக்கலாம்” என்றும் சொல்லி வருவதால் படுபயங்கர அப்செட்டுக்கு ஆளாகியிருக்கிறார் சந்தானம். இவருக்கு உதவி வரும் ட்ரைடென்ட் நிறுவனம், சமீபத்தில்தான் ‘ரிச்சி’ என்ற மொக்கை பீஸ்சை ரிலீஸ் செய்தது. எண்ணி அரை ஷோ கூட ஓடவில்லை அப்படம். அதையும் மனதில் வைத்துக் கொண்டு ஒரேயடியாக கதவை அடைக்கிறார்களாம் தியேட்டர்காரர்கள்.

கடந்த சில நாட்களாக சந்தானமே ஒவ்வொரு தியேட்டர்காரர்களுக்கும் போன் போட்டு தரைமட்டமாக கெஞ்சி வருவதாக தகவல்.

உலக்கையை முழுங்கணும்னு ஆசைப்படலாம். அதுக்கு வாய் வயிறு வரைக்கும் இருக்கணும்ல?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பள்ளிப்பருவத்திலே / விமர்சனம்

‘கருப்பாக இருப்பதெல்லாம் எருமையும் இல்லை. கலராக இருப்பதெல்லாம் அருமையுமில்லை’. இதன் தொடர்ச்சியாக, ‘பள்ளிக்கூடக் காதலெல்லாம் காதலுமில்லை’ என்று முடித்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் இந்தப்படம் சொல்லும் காதலும்,...

Close